திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி திவாகருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை!
வெள்ளி 31 மார்ச் 2017 13:28:19

img

மூன்றாண்டுகளுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியான தன் மகன் திவாகருக்கு நீதி கிடைக்காமல் போய் விட்டதே என்று கூறி ஒரு தாய் நீதிமன்ற வளாகத்திலேயே உட்கார்ந்துக்கொண்டு கதறி அழுதது அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. புக்கிட் அமானில் பணி யாற்றி வந்த திவாகர் த/பெ தங்கவேலு (வயது 37) கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிக்பீல்ட்ஸ் டிராவல்ஸ் காவல் நிலையத்திற்கு பின்புறம் துப்பாக்கித் தோட்டக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இச்சம்பவம் தொடர்பில் திவாகருடன் பணியாற்றிய போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.இவ்வழக்கு விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.இவ்வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதி பதி டத்தோ சித்தி மரியா பிந்தி ஹாஜி அஹ்மாட் நேற்று வாசித்தார். திவாகர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் கைது செய்யப்பட்ட அதிகாரி விடுவிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இத்தீர்ப்பைக் கேட்டவுடன் திவாகரின் தாயார் செல்லம்மா நீதிமன்றத்தில் கதறி அழுதார். அந்த அதிகாரி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். பின் நீதிமன்றத்தின் வெளியே அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.திவாகர் எங்களின் ஒரே மகனாவார். அவரின் பாதுகாப்பில் தான் நாங்கள் அனை வரும் வாழ்ந்து வந்தோம். திடீரென கடந்த 2014ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் என் மகன் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் வயதான போதிலும் நீதிமன்ற தீர்ப்புக்காக அலைந்தோம்.எங்கள் தரப்பில் ஆஜரான டிபிபி தரப்பில் இருந்து எங்களுக்கு எந்தவொரு உதவிகளும் கிடைக்கவில்லை. இது நாள் வரை சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் கைத் தொலைபேசி எண்கள் கூட எங்களிடம் இல்லை. இச்சூழ்நிலையில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி நிரபராதி என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. இனி என்ன செய்வது என்றே எங்க ளுக்குத் தெரியவில்லை என்று செல்லம்மா கூறினார். கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் இன்றைய தீர்ப்பின் போது போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இது தான் எங்களின் போராட்டத்தில் மிகப் பெரிய தடைக்கல்லாக உள்ளது. இருந்த போதிலும் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் முதன்மை நோக்கமாக உள்ளது.வயதான காலத்தில் என்ன செய்வது, யாரை பார்ப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று செல்லம்மா வேதனையுடன் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img