திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

விரைவு ரெயில் தடம்புரண்டதில் 52 பேர் காயம்
வியாழன் 30 மார்ச் 2017 15:35:37

img

உத்தர பிரதேச மாநிலம் மகோபா ரெயில் நிலையம் அருகே சென்றபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், அந்த ரெயிலின் 8 பெட்டிகள் தண்ட வாளத்தை உடைத்துக்கொண்டு தரையில் புதைந்தது. சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு தண்டவாளம் சேதம் அடைந்தது. இந்த விபத்துபற்றி தகவல் அறிந்த ரெயில்வே மீட்புக்குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 52 பயணிகள் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து திட்டமிட்ட நாசவேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், முதற்கட்ட விசாரணையில் அப்படி எதுவும் சந்தேகப்படும்படியான தகவல் கிடைக்கவில்லை என காவல்துறை கூடுதல் இயக்குனர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என கூறினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த் நாத் சிங், சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டார். பின் னர் விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார். ரெயில்வே வாரிய உறுப்பினர் முகமது ஜாம்ஷெட், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ரெயில் தடம்புரண்டது தொடர்பாக ரெயில்வேயின் மூத்த அதிகாரியால் விசாரணை நடத்தப்படும்’ என்றார். இது நாசவேலையா அல்லது பராமரிப்பு குறைபாடு காரணமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, எதையும் உறுதியாக கூற முடியாது என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
img
ரூ.158.5 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

திட்டத்துக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

மேலும்
img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img