திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

20 ஆயிரம் வெள்ளி கையூட்டு!
வியாழன் 30 மார்ச் 2017 13:26:18

img

கடந்த 2015 டிசம்பர் மாதத்திற்கும் 2016 ஜூன் மாதத்திற்கும் இடையில் 20 ஆயிரம் வெள்ளி கையூட் டுப் பணம் கோரியதாக மூன்று போலீஸ்காரர்கள் மீது நேற்று ஜொகூர்பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.எனினும் அம்மூவரும் குற்றச் சாட்டை மறுத்து விசாரணை கோரினர். தங்களுக்கு எதிராக செஷன்ஸ் நீதிபதி கமாருடின் கம்சுன் முன்னிலையில் தனித் தனியாக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட வேளையில் இன்ஸ்பெக்டர் ஈசா அமாட் (வயது 31) கான்ஸ்டபள் எஸ்.லோகேஸ்வரன் (வயது 32), கான்ஸ்டபள் ரோமாரினோ ராப்பி (வயது 35) ஆகியோர் குற்றச் சாட்டை மறுத்து விசாரணை கோரினர். விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை விடுவிக்க ஆயிரம் வெள்ளியை கையூட்டாக கேட்டதாக இன்ஸ்பெக்டர் ஈசா அமாட் மீது குற்றம் சாட்டப்பட்டது.கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நூசா ஜெயா சட்ட ஆலோசனை அலுவலகத்தில் ஒரு பெண்ணி டம் அப்பணத்தை கோரியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தடுப்புக் காவலி லிருந்து அந்த சந்தேக நபரை விடுவிக்க கான்ஸ்டபள் ரோமாரினோ ராப்பி அதே பெண்ணிடம் 17 ஆயிரம் வெள்ளியை கையூட்டுப் பணமாக கோரியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2015 டிசம்பர் 21ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு ஜொகூர் பாரு தென் பகுதி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அப்பெண்ணிடம் 10 ஆயிரம் வெள்ளியையும் அதே நாளில் மாலை 5.00 மணிக்கு போலீஸ் தலைமையக எதிர்ப்புறமுள்ள உணவுக் கடையொன்றில் 7 ஆயிரம் வெள்ளியையும் கையூட்டாக கோரியதாகவும் இரு குற்றச்சாட்டுகள் ரோமா ரினோ ராப்பி மீது சுமத்தப் பட்டன. இதனிடையே, வேலை அனுமதி பத்திரம் இல்லாத வெளிநாட்டுக்காரர் ஒருவரை கைது செய்யாமலும் தலை யிடாமலும் இருப்பதற்காக கான்ஸ்டபள் எஸ்.லோகேஸ்வரன் மீது இரு குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு மே 8ஆம் தேதி விசார ணைக்கு வரும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
img
அம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை

மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தி

மேலும்
img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img