திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

மனைவி பிரசவத்திற்குப் பின் கணவனுக்கு ஒரு மாதம் விடுமுறை!
செவ்வாய் 28 மார்ச் 2017 13:42:09

img

அரசாங்கம், தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தன் மனைவி பிரசவமாகும்போது அவரின் கணவர் அல்லது தந்தைக்கு முழு சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று எம்.டி.யு.சி. எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நேற்று வலியுறுத்தியது. தற்போது அவர் களுக்கு வழங்கப்பட்டு வரும் விடுமுறைகள் போதுமான அளவுக்கு இல்லை. தற்போது தன் மனைவி பிரசவமாகும்போது அரசாங்க ஊழியராக இருக்கும் அவரின் கணவர் அல்லது தந்தைக்கு 7 நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுகிறது. அதேவேளையில், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அவர்களின் முதலாளிமார்களின் விருப்பத்திற்கு ஏற்ப விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. மனைவி பிரவசமாகும்போது அவரின் கண வருக்கு வழங்கப்பட வேண்டிய விடுமுறை குறித்து மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. காரணம் தற்போது தன் மனைவி பிரவசம் ஆகும் போது அரசாங்க ஊழியர்களுக்கு 7 நாட்களும், சில மாநில அரசாங்கங்களில் 2 வாரங்களும், தனியார் துறையினருக்கு 5 நாட்களும், சில நிறுவனங்கள் விடுமுறையே கொடுக்காமலும் உள்ளன. நாட்டில் பல மனைவிகள் பிரவசம் ஆகும்போது தன் கணவர் அருகில் இல்லாத குறையை கருத்தில் கொண்டு இப்பரிந்துரையை எம்.டி.யு.சி. முன்வைத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜே.சோலோமோன் கூறினார். பிரவசத்திற்குப் பிறகு மனைவிகளின் குணங்கள் மாற்றம் அடைவதால் அவர்களையும், அவர்தம் குழந்தையையும் பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கு கணவர்களுக்கு இந்த நீண்ட விடுமுறை மிகவும் அவசியமாகும். பிரவசத்திற்குப் பின்னர் அதிகமான பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தன் சொந்தப் பிள்ளையையே கொலை செய்யும் நிலை தற்போது நாட்டில் பெருகியுள்ளதால், அவர்களைப் பாதுகாக்க கணவர் அவர்களின் அருகில் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே, மனைவி பிரவசமாகியதும் அவர்தம் கணவர் அல்லது தந்தைக்கு முழு சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை வழங்கும் வகையில் அரசாங்கம் உடனடியாக சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
img
அம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை

மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தி

மேலும்
img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img