புதன் 21, நவம்பர் 2018  
img
img

கிளைக்கூட்டத்தை நடத்தியை அறிவிக்க வெ.200 கப்பம்!
செவ்வாய் 28 மார்ச் 2017 13:30:12

img

மஇகா கிளைக்கூட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வரும் வேளையில் நெகிரி மாநிலத்தில் கிளைகளின் ஆண்டுக் கூட்டத்தை நடத்தாமலேயே தொகுதி பொறுப் பாளர்களிடம் 200 வெள்ளி கப்பம் கட்டினால் ஆண்டுக் கூட்டம் நடந்து முடிந்து விட்டது என அறிவிக்கப்படும் என்றும் தற்போது பரவலாக வசூல் வேட்டை நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கைங்கரியத்தை தொகுதியில் உள்ள முக்கியப் பொறுப்பாளர்கள் செய்து வருவதாக கிளைத் தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாநிலத்திலுள்ள மஇகா தொகுதி பொறுப்பாளர்கள் பெரும்பாலானவர்கள் வெ.200 கப்பம் கட்டும் விவகாரத்தில் நேரடியாக ஈடுபட்டிருப்பதாகவும் மாநில தொடர்புக் குழு தலைவர் டத்தோ எல்.மாணிக்கத்திற்கு இந்த விவகாரம் தெரிந்தும் மௌனம் சாதித்து வருவதாகவும் புகார்கள் கூறப்பட்டன. மஇகா கிளையின் ஆண்டுக் கூட்டத்திற்கு உறுப்பினர்களை வரவழைத்து அவர்களுக்கு தேநீர் பலகாரங்கள் கொடுத்து உபசரிக்க ஆகும் செலவில் சிறிய தொகையான வெ.200 கப்பம் தொகுதிக்கு கட்டினால் போதும் நாங்களும் நன்மை அடைவோம் நீங்களும் நன்மையடைவீர்கள் என கிளைத் தலைவர் களிடம் வியாபாரம் பேசுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய காங்கிரஸில் புதிய தொகுதித் தலைவர்களாக - செயலாளர்களாக உருவெடுத்துள்ள அரசியலை கப்பம் கட்டும் வியாபார சந்தையாக மாற்றி வரும் விவகாரத்தை எதிர்த்து பல தலைவர்கள் கிளையை மூடுங்கள் பார்ப்போம் என எச்சரித்ததுடன், வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு போகி றோம் என்று துணிந்து குரல் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. பலதரப்பட்ட நெருக்குதல்களை கொடுத்து சாதாரண மஇகா கிளை தலைவர்களை மிரட்டி ஆண்டுக் கூட்டத்தை நடத்தாமல் இருக்க பணம் கேட்கும் சம்பந்தப்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள் மீது நெகிரி மஇகாவும், தேசிய மஇகாவும் நடவடிக்கை எடுக்காமல் போனால் இருக்கும் கொஞ்ச நஞ்ச மக்கள் ஆதரவும் அடியோடு காலியாவதும் திண்ணம் என்று மஇகா வட்டாரத்தில் மேலும் கூறப்பட்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மே.9 தேர்தல் வெற்றியை அறிவிப்பதில் தாமதம் ஏன்? அம்பலப்படுத்தினார் துன் மகாதீர்.

அம்னோ, பாஸுடன் இணையும்படி கூட்டணியைச்

மேலும்
img
நாட்டைச் சீர்குலைத்த நயவஞ்சகர்கள். ஊழல் அரசியல்வாதிகளை சுல்தான் நஸ்ரின் ஷா சாடினார்.

இத்தகைய சீர்கெட்ட தலைவர்களால் ஏற்படக்கூடிய

மேலும்
img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img