புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

சிறுமி லாரணியா மரணத்தின் பின்னணி!
செவ்வாய் 28 மார்ச் 2017 12:50:24

img

நான்கு வயது சிறுமி லாரணியா வில்பெர்ட்டின் மரணம் தொடர்பான விவகாரத்தை தாங்கள் புலன் விசாரணை செய்யவிருப்பதாக மலேசிய மனித உரி மைகள் ஆணையம் (சுஹாகாம்) கூறிற்று. தன் மகளின் மரணத்திற்கு மருத்துவமனையின் அலட்சியப்போக்கே காரணம் என லாரணியாவின் தாயார் பி. பிரேம் ஸ்ரீ கூறினார். மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே லாரணியா மரணமடைந்து விட்டதாக கிள் ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை இயக்குநர் கூறுவது பொய் என குறிப்பிடும் ஒரு மகஜரை நம்பிக்கை அமைப்பு, பிரேம் ஆகியோரிடம் இருந்து சுஹாகாம் ஆணையர் டத்தோ லோகே யிம் பெங் பெற்றுக் கொண்டார். சுஹாகாம் நிச்சயமாக புலன் விசாரணை நடத்தும். என்ன நடந்தது என நாம் கூற இயலாது. ஆனால் அந்த குடும்பத்தின் பால் நாங்கள் இரக்கம் கொள்கிறோம். இப்போது தனி ஆளாக இருக்கும் அவர்தான் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. நான் இம்மாதிரியான ஒரு சம்பவத்தை தனிப்பட்ட முறையில் கையாண்டதே இல்லை. ஆனால் இதை நாங்கள் நிச்சயமாக உன்னிப்பாக கவனிப்போம் என்று லிம் நேற்று ஆணையத்தின் தலைமை யகத்தில் தி மலேசியன் டைம்ஸிடம் தெரிவித்தார். லோக்குடனான சந்திப்பின் போது, சிறுமி லாரணியா எதிர் நோக்கிய சோதனைகளும் வேதனைகளும் விவரிக்கப்பட்டன. நாற்பது டிகிரி அளவிற்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட லாரணியா, மார்ச் 14 ஆம் தேதியில் இருந்து மருந்தகங்களுக்கும் மருத்துவனைக்கும் கொண்டு செல்லப்பட்டு இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. எனினும், லாரணியா இன்னும் குணமடையாததால் அவரை மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லும்படி அவரின் தாயாரிடம் ஒரு மருந்தகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி லாரணியா மரணமடைந்தார். தன் மகளை அந்த மருத்துவமனைக்கு இரண்டாம் தடவையாக கொண்டு சென்று அனுமதித்த போது அவர் சுயநினைவில் இருந்ததாக பிரேம்ஸ்ரீ கூறினார். என் மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் காத்திருக்கும்படி என்னிடம் கூறப்பட்டது. பின்னர் லாரணியா மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னரே இறந்து விட்டதாக ஒரு டாக்டர் தெரிவித்தார் என்றார் பிரேம்ஸ்ரீ. தொடக்கத்திலேயே தன் மகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் இன்னும் உயிரோடு இருந்திருப்பார் என்றும் பிரேம் ஸ்ரீ கூறினார். உண்மையைக் கண்டறிய மருத்துவமனையில் சிசிடிவி படக்காட்சிகளை பார்க்கும் படி சுஹாகாமை அந்த மகஜரில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img