img
img

கோவையிலிருந்து காரிலேயே லண்டன் பயணிக்கும் 3 பெண்கள்..
திங்கள் 27 மார்ச் 2017 17:25:07

img

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக 3 பெண்கள் கோவையில் இருந்து கார் மூலம் லண்டன் செல்லும் பயணத்தை நேற்று தொடங்கினர். கோவை கல்வியறிவு இயக்கம் சார்பில் கோவையைச் சேர்ந்த 3 பெண்கள் தங்கள் பயணத்தை நேற்று தொடங்கினர். தமிழக நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வேலுமணி காரை கொடியசைத்து பெண்களின் பயணத்தை தொடக்கி வைத்தார். இதுகுறித்து அப்பெண்கள் கூறுகையில், பெண்களுக்கு கல்வி வழங்குவது குறித்தும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக இந்த பயணத்தை மேற்கொள்கிறோம். பெண்கள் படித்தால் அவர்கள் மூலம் ஒட்டுமொத்த அவரது குடும்பமே கல்வி அறிவு பெறுவர். அனை வரும் கல்வியறிவு பெறுவது என்பது நல்ல விஷயம், இதற்காக நாங்கள் லண்டனுக்கு காரில் செல்கிறோம். உலகில் உள்ள எந்த இந்திய பெண்ணும் இன்னும் ஒடுக்கப்பட்டும், பின்தங்கியும் இருக்கக் கூடாது என்றனர். மியான்மர், லோவோஸ், தாய்லாந்து, சீனா, ரஷ்யா. மத்திய ஐரோப்பா, போலந்து உள்ளிட்ட 24 நாடுகள் வழியாக லண்டன் சென்றடைய உள்ளனர். மொத் தம் 24,000 கி.மீ. தூரத்தை மொத்தம் 70 நாள்களில் கடக்கவுள்ளனர். அதாவது வரும் ஜூன் 5-ஆம் தேதி லண்டனை அடைவர் என்று எதிர்பார்க்கப்படு கிறது. மூவரும் ஒவ்வொரு நாட்டிலும் இறங்கி பெண் கல்வி குறித்த முக்கியத்துவத்தையும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வை ஏற் படுத்துவர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
img
ரூ.158.5 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

திட்டத்துக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

மேலும்
img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img