ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ராமசாமிக்கு பிரிட்டனின் உயர் விருது!
ஞாயிறு 26 மார்ச் 2017 11:42:09

img

(IRDK) லேண்ட் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ராமசாமிக்கு லண்டன் மாநகரில் அமெரிக்க தலைமைத்துவ இயக்கத்தின் (American Leadership Development Association (ALDA), தி லீடர்கள் அனைத்துலக சஞ்சிகையும் (The Leaders International Magazine) இணைந்து மத்திய கிழக்கின் வர்த்தக ஆளுமைகள் 2016 ஆம் ஆண்டுக்கான விருதை வழங்கி சிறப்பு செய்துள்ளன. இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரிட்டனுக்கான மலேசியத் தூதர் டத்தோ அஹமது ரஷீதி அஜீசி, வட அயர்லாந்துக்கான மலேசியத் தூதர் சுலைமான் அல் மரூசி, பிரிட்டனுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் காலித் அல் துவைசான், குவைத் தூதர் அப்துர் ரஹீம் ஹஸன் முஹம்மது நகீ, வளைகுடா நாடுகளின் வர்த்தக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பத்ரியா அல் முல்லா, சர்வதேச அமீரகக் குழுமத்தின் தலைவர், சர்வதேச லீடர்ஸ் சஞ்சிகையின் குழுமத் தலைவர் ஷாகுல் ஹமீது தாவூத், முக்கியப் பிரமுகர்களின் முன்னிலையில் இந்த விருதளிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. லண்டனிலுள்ள இன்டர்கான்டினென்ட் பார்க் லேன் தங்கும் விடுதியில் இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தேறியது. டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ராமசாமி 1988 ஆம் ஆண்டு தமது நிறுவனமான (IRDK Land) தொடங்கினார். கடுமையான உழைப்பாளியான டான்ஸ்ரீ டாக்டர் ராமசாமி நிலம், கட்டுமானத் துறைகளில் படிப்படியாக முன்னேறினார். இன்று மலேசியாவின் மதிக்கத்தக்க பெரு நிறுவனங்களில் ஒன்றாக அது உயர்ந்து நிற்பதற்குக் காரணம் டான் ஸ்ரீ இராமசாமியின் நுணுக்கமான தொழில் நுட்ப அறிவும் அனுபவமும்தான். சர்வதேச ஆளுமைகளில் 31 பிரிவுகளில் இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. வர்த்தக, தொழில் துறையில் சாதனைகள் புரிந்த மைக்காக டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ராமசாமிக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக தி லீடர்ஸ் சர்வதேச சஞ்சிகையின் பொறுப்பாளர் ஷாகுல் ஹமீது தாவூத் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img