வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

வைரலான லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரம்!
சனி 25 மார்ச் 2017 12:38:01

img

வெ. 7.06 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப் பள்ளி யில் புதிய கட்டடத்தினைப் பயன்படுத்து வதற்கான வாய்ப்புகள் கிடைக்குமா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் சுமார் 20 மாணவர்களின் எதிர்பார்ப்பு எப்போது நிறைவேறும் என்பதற் கான உத்தரவாதத்தினை இன்று வரை மலேசியக் கல்வி அமைச்சு வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதை பெற்றோர்களோடு ‘லஞ்சாங் தமிழ்ப் பள்ளியைத் திறப்போம்‘ நடவடிக் கைக் குழுவினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிதாகக் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்து வரும் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கூடிய நாடு தழுவிய அரசு சாரா இயக்கங்களின பொறுப்பாளர்கள் மாணவர்களின் நலன் கருதி பள்ளியினைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக முட்டுக்கட்டையாக இருந்து வரும் சாலை நிர்மாணிப்பிற்கு விரைவில் தீர்வினைக் காண கல்வியமைச்சின் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்திருந்த நிலையில்; * சாலையின் நிர்மாணிப்பிற் காக 2016இல் வழங்கப்பட்ட ரிம.450,000 தொடர்பில் பள்ளி மேலாளர் வாரியம் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும். * லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரங்களில் திட்ட மேலாண்மை நிறுவனம் பொறுப்பாளரின் தலையீடுகள் ஆராயப்பட வேண்டும். * பள்ளி விவகாரங்களில் மஇகாவின் அரசியல் தலையீடுகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். * இரண்டு வாரங்களில் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிரந்தர தீர்விற்கான செயல்பாடுகள் அறிவிக்க வேண்டும்! என்ற கோரிக்கைகளையும் முன் வைத்திருந்தனர். அறிக்கை ம்ட்டுமே பதிலாகுமா? தேசிய விவகாரமாக உருமாறியிருக்கும் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரம் தொடர்பில் 24.3.2017இல் தமிழ்ப் பத்திரிகைகளில் ( மலேசிய நண்பன் அல்ல) வெளி வந்திருக்கும் அறிக்கையின் வழி 2015ஆம் ஆண்டில் சாலை நிர்மாணிப்பிற்காக ரிம.450,000 வழங்கியிருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ள ப.கமலநாதன் இரண்டு ஆண்டுகளாகியும் சாலையை நிர்மாணிக்காமல் இருந்து வருவது நியாயமான நடவடிக்கையா? என்பதை ஆராய வேண்டியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. பத்திரிகை அறிக்கைகள் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விவகாரத்திற்கு தீர்வினை ஏற்படுத்துமா? என்பதே பெற்றோர்களின் கேள்வியாகும். மலேசியாவின் 200 ஆண்டு தமிழ்க் கல்வியின் நிறைவு விழாவினைக் கொண்டாடுவதற்குத் தலைமையேற்றிருந்த ப.கமலநாதன் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பிரச்சினைகளுக்கு எதிர்மறையாகச் செயல்படுவது சரியா என்பதை அறிய பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல் லஞ்சாங் தமிழ்ப்பள்ளியைப் போல் மேலும் முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதற்கு எப்போதுதான் தீர்வு பிறக்கும் என்பதே இன்றைய கேள்வியாகும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img