செவ்வாய் 18, ஜூன் 2019  
img
img

பிரபாகரன், தட்சணாமூர்த்தி இருவருக்கும் சிங்கப்பூரில் தூக்குத்தண்டனை!
சனி 25 மார்ச் 2017 12:16:16

img

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தூக்குத்தண்டனையை விதித்து இருக்கும் சிங்கப்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்ய அனுமதி கோரி இரு மலேசிய இந்தியர்கள் செய்து கொண்ட மனுவை இங்குள்ள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எஸ். பிரபாகரன் (வயது 30), தொழிற்சாலை ஊழி யர் கே. தட்சணாமூர்த்தி (வயது 32) ஆகியோர் சார்பில் அவர்களின் தாயார்கள் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய அனுமதி கோரி வழக்கு மனு தொடுத்து இருந் தனர். அந்த இரண்டு இளைஞர்கள் மீது நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்று குற்றஞ்சாட்டிய பிரபாகரனின் தாயார் வி. ஈஸ்வரி (வயது 54) மற்றும் தட்சணாமூர்த்தியின் தாயார் ஏ. லெட்சுமி, இந்த வழக்கு விசாரணையை நெதர்லாந்தில் உள்ள தி ஹெக் அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல அனுமதி வழங்குவதற்கு சிங்கப்பூரின் நீதித்துறைநிர்பந்திக்க வேண்டும் என்று தங்கள் வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இவ்விரு தாயார்களின் வழக்கு மனுவை நீதிபதி ஹனிப்பா பரிகுல்லா நேற்று முன்தினம் வியாழக்கிழமை தனது சேம்பரில் விசாரணை செய்தார். அவர் களின் மனுக்களை நிராகரிப்பதாக தீர்ப்பு அளித்தார். அவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என். சுரேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். இது அந்நிய நாட்டின் கொள்கை சம்பந்தப்பட்ட விவகாரம் என்றும் இதில் தலையிடுவதற்கு மலேசிய நீதித்துறைக்கு அதிகாரமில்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார் என்று சுரேந்திரன் தெரிவித்தார். சிங்கப்பூரில் நடைபெற்ற வழக்கு நியாயமாக நடைபெறவில்லை என்பதே அந்த தாயார்களின் வாதமாகும். எனவே இவ்வழக்கை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு ஓர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இவர்களின் வழக்கு மனுவை நிராகரித்து இருக்கும் மலேசிய நீதின்றம், இது பொது நலன் சார்ந்த வழக்கு என்பதால் எந்தவொரு வழக்கு செலவுத்தொகையையும் விதிக்க உத்தரவிடவில்லை என்றார் சுரேந்திரன். எனினும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்றார் அவர். இது மலேசியப் பிரஜை சம்பந்தப்பட்ட வழக்காகும். அவர்களுக்கு எதிராக வெளிநாட்டில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவே நாங்கள் உணர் கிறோம். எனவே இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு இதில் தலையிட நீதிமன்றம் உரிமை பெற்று இருக்கிறது என்று சுரேந்திரன் குறிப்பிட்டார். இவ்வழக்கில் அவ்விரு தாயார்களும் மலேசிய அரசாங்கத்தையும் வெளியுறவு அமைச்சையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இருந்தனர். நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்று கோரும் உரிமை இவ்விருவருக்கும் உண்டு என்பதை நீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தங்கள் வாதங்களில் ஒன்றாக அந்த இரு தாய்மார்களும் குறிப்பிட்டுள்ளனர். 22.24 கி.கிராம் எடை கொண்ட போதைப்பொருளை கடத்திய குற்றத் திற்காக கடந்த 2014 ஜூலை 22 ஆம் தேதி சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் பிரபாகரனுக்கு தூக்குத் தண்டனை விதித்தது.போதைப்பொருள் வழக்கில் தங்க ளுக்கு நியாயமான நீதி வழங்கப்படவில்லை என்று தட்சணாமூர்த்தியின் தாயார் லெட்சுமி கோரியுள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
3 ஆவது முறையாக தீச்சம்பவம்: இந்தியர்களுக்குச் சொந்தமான 8 வீடுகள் அழிந்தன

இந்தியன் செட்டில்மென்டில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில்

மேலும்
img
மலிவு விலை மதுபானத்தை குடித்த இரு மலேசியர் உட்பட அறுவர் மரணம்

ஜார்ஜ்டவுனில் மதுபானம் அருந்தியதால் அறுவர் மரணமடைந்துள்ள

மேலும்
img
ஓரின உறவு விவகாரம்: காணொளியில் திருத்தம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய ஊடக அமைப்பு 

அந்த காணொளியில் இருப்பவர் அஸ்மின்தான்

மேலும்
img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img