ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

நடுக்காட்டில் பெண்கள், 2 சிறார்கள் உட்பட 15 இந்தியரை கொத்தடிமையாக வைத்திருந்த ஆசாமி!
சனி 25 மார்ச் 2017 11:42:46

img

பெங்காலான் உலு கம்போங் தாசேக் என்ற நடுக்காட்டில் ஒரு செம்பனைத் தோட்டத் தில் இரு சிறார்கள் உட்பட 15 இந்தியர் களை கொத்தடிமைகளாக வைத்திருந்து, சம்பளம் ஏதும் கொடுக்காமல் அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக ஆசாமி ஒருவர் மீது நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்த நடுகாட்டில் வைக்கப்பட்டிருந்த 15 இந்தியர்களும் நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூரிலிருந்து அந்த ஆசாமியினால் இரண்டு வருடங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டவர்கள் ஆவர். நெகிரி செம்பிலான் பகாவைச் சேர்ந்த கணேஷ் த/பெ லெட்சுமணன் (வயது 43) என்ற அந்த குத்தகையாளர் மீது மொத்தம் 15 மனித கடத்தல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. இரு கைகளும் விலங்கினால் பிணைக்கப்பட்டு,அந்த நபர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.மாஜிஸ்திரேட் நோர்ஹிடாயா முகமட் ஹராபாட் முன் னிலையில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட போது தமக்கு மலாய் மொழி அவ்வளவாக தெரியாது என்று அந்த நபர் நீதிமன்றத்தில் கூறினார். விசார ணைக்கு ஏதுவாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு தமிழ்மொழிப் பெயர்ப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்தார். கடந்த 2016 ஏப்ரல் மாதத்திற்கும் இவ்வாண்டு பிப்ரவரி 26 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாளில் பேரா, பெங்காலான் உலு கம்போங் தாசேக் , பெலுக்கார் சேமாக், லாடாங் கோப்பராசி கெலப்பா சாவிட் சென். பெர்ஹாட் எனும் செம்பனைத் தோட்டத்தில் இரண்டு சிறார்கள் உட்பட 15 பேரை அந்த நபர் கொத் தடிமைகளாக வைத்திருந்து கொடுமைப்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வந்த தகவலை பொது மக்கள் வாயிலாக தெரிந்து கொண்ட டி.7 போலீஸ் படை கடந்த பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டபோது, அவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு வந்தது அதிர்ச்சியில் உறைய வைத்தது. சிறார்கள் உட்பட அந்த 15 பேரையும் கட்டம் கட்டமாக மீட்ட போலீசார், அவர்களை நாட்டில் பல பகுதிகளில் செயல்படும் பாதுகாப்பு இல்லங்களில் வைத்தனர். அதேவேளையில் அவர்களை கடத்தி சென்று கொடுமைப்படுத்தியாக கூறப்படும் அந்த குத்தகையாளரையும் அவரின் மனைவியையும் போலீசார் கைது செய்தனர். எனினும் இரு வார கால விசாரணைக்கு பின்னர் அந்த நபரின் மனைவி விடுவிக்கப்பட்டார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நெகிரி செம்பிலான், பகாவ், செலாஞ்சாரில் 30 க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட பாணியில் இந்த 15 பேரும் துன்புறுத்தப்பட்டு வந்ததாக இதற்கு முன்பு பேரா போலீசார் தெரிவித்து இருந்தனர். எனினும் தனக்கு எதிராக கொண்டு வரப் பட்ட 15 குற்றச்சாட்டுகளையும் அந்த நபர் மறுத்து விசாரணை கோரினார். அவரின் சார்பில் வழக்கறிஞர் டத்தோ கருணாநந்தன் ஆஜராகிய வேளையில் அரசு தரப்பில் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் என். ஜெயந்தி ஆஜரானார். குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் 2007 ஆம் ஆண்டு மனித கடத்தல் சட்டப்பிரிவின் கீழ் அந்த நபர் மீது 15 குற்றச்சாட்டுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வழக்கு மீண்டும் செவிமடுப்புக்கு ஏதுவாக மார்ச் 27ஆம் தேதி செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img