வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

எப்ஏஎம் இன் புதிய தலைவரானார் ஜொகூர் பட்டத்து இளவரசர்!
வெள்ளி 24 மார்ச் 2017 16:47:19

img

மலேசிய கால்பந்து சங்கத்தின் புதிய தலைவராக ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டார்.மலேசிய கால் பந்து சங்கத்தின் (எப்ஏஎம்) 53ஆவது பேராளர் மாநாடு நாளை நடைபெறவுள்ளது. புதிய நிர்வாக குழுவிற்கான தேர்தல் நடைபெறுவதால் இம்மாநாடு மக் களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலின் தலைவர் பதவிக்கு துங்கு இஸ்மாயில், கிளந்தான் மாநில முன்னாள் கால்பந்து சங்கத்தலைவர் டான்ஸ்ரீ அனுவார் மூசா ஆகிய இரு வரும் போட்டியிடுவதாக இருந்தது. நேற்று காலைவரை இவ்விருவரும் நேரடியாக போட்டியை சந்திக்கவுள்ளனர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் டான்ஸ்ரீ அனுவார் மூசா நேற்று நாடாளு மன்றத்தில் திடீரென செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பைச் செய்தார். அதாவது நாளை நடைபெறும் எப்ஏஎம் தலைவர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக அவர் அறிவித்தார்.எப்ஏஎம்மிற்கு மிகச் சிறந்த தலைமைத்துவம் தேவைப்படுகிறது. அதற்கு துங்கு இஸ்மாயில் தான் தலைவராக தலைமையேற்க வேண்டும்.இதன் அடிப்படையில் தான் இப்போட்டியில் இருந்து நான் விலகிக் கொண்டேன். என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தில் தான் இம்முடிவை நான் எடுத்துள்ளேன். பதவி விலகுமாறு யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை என்று டான்ஸ்ரீ அனுவார் மூசா கூறினார்.இதனிடையே துங்கு இஸ்மாயில் தனது தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார்.11 அம்சங்களைக் கொண்ட இத்தேர்தல் அறிக்கையில் எப்ஏஎம் தலைவராக தாம் தேர்வு செய்யப்பட் டால் எப்ஏஎம்மில் அரசியல் தடையீட்டிற்கு முழுமையாக தடை விதிக்கப்படும். அதே வேளையில் எப்ஏஎம் தலைவரை தேர்வு செய்யும் முழு அதிகாரத்தையும் கால்பந்து ரசிகர்களுக்கே வழங்குவேன்.இதற்காக ஆட்சிக் குழுவில் முழு விவாதம் நடத்தி சங்கத்தின் சட்ட விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வருவேன் என்று டிஎம்ஜே கூறியுள்ளார்.நாட்டின் கால்பந்து கலாச்சாரம் முழு மையாக மாற்றப்படும். இதனால் எப்ஏஎம் மில் பல அதிரடி மாற்றங்கள் நடத்தப்படும். சூப்பர் லீக், பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டிகளின் தரத்தை உயர்த்துவதுடன், பொருளாதார ரீதியில் அக்கால்பந்துப் போட்டிகள் மிகப் பெரிய வளர்ச் சியை காணும். நாட்டில் கால்பந்துத் துறை மேம்பாட்டுத் திட்டத்தின் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதேவேளையில் நாட்டின் கால்பந்துத் துறையை மேம்படுத்த அனைத்துலக ரீதியில் உள்ள நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்படும். தேசிய அணியில் பல மாற்றங்கள் செய்யப்படும், நடுவர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டு வரப்படும். கால்பந்துத் துறைக்கான அடிப்படை வசதிகள் நவீனப்படுத்தப்படும் என்று துங்கு இஸ்மாயில் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img