ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

கழுத்து அறுத்து, எரித்து, இந்தியப் பெண் கோரக் கொலை.
வெள்ளி 24 மார்ச் 2017 12:52:34

img

இந்தியப் பெண், கழுத்து அறுக்கப்பட்டு எரியூட்டப்பட்டு மிக கோரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இவ்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. தொழிற்சாலையில் குமாஸ்தாவாக வேலை செய்து வந்த இரு பிள்ளைகளுக்கு தாயான லெட்சுமி த/பெ வரதன் (வயது 42) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் கொலை தொடர்பில் ஓர் இந்தியப் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாலான் பந்திங், தெலுக் பங்லீமா காராங்கில் உள்ள அம்கோ எனப்படும் முன்பு தொஷிபா மின்னியல் நிறுவனமாக விளங்கிய தொழில்பேட்டையில் கியூ.சி. எனும் குமாஸ்தாவாக வேலை செய்து வந்த லெட்சுமியின் சடலம், நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் கிள்ளான், ஜாலான் லங்காட், தாமான் கிளாங் ஜெயா, ஜாலான் செலாம்பீட் 25 எனும் சாலையில் எரிக்கப்பட்ட ஒரு காருக்கு அருகில் கிடந்தது கண்டு பிடிக்கப் பட்டது. கழுத்து அறுக்கப்பட்டு, முகத்தில் ஆழமான காயங்களுடன் எரியூட்டப்பட்ட நிலையில் கிடந்த லெட்சுமியின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டு, கிள் ளான் துங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, சாலையோரத்தில் ஒரு கார் தீப் பற்றிக்கொண்டு எரிவதாகவும் அருகில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாகவும் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து அவ்விடத்திற்கு தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் தீயணைப்புப்படையினர் விரைந்தனர். எனினும் அங்கு செல்வதற்குள் கார் முற்றாக எரிந்து விட்டது. எனினும் கார் நின்ற இடத்திலிருந்து சுமார் மூன்று மீட்டர் தூரத்தில் பெண்ணின் சடலம் ஒன்று கிடந்ததைத் தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டது. தென் கிள்ளான் மாவட்டப் போலீஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி ஏ.எஸ்.பி லீ கோக் ஹோங் தலை மையிலான போலீஸ் குழுவினர் சம்பவ நிகழ்ந்த பகுதிக்கு விரைந்தனர். அந்தப் பெண்ணின் உடலின் சில பகுதிகள் தீயில் எரிந்த நிலையில் காணப் பட்டது. அவரின் சடலத்தின் அருகில் மூன்று கைப்பேசிகள் கண்டு எடுக்கப்பட்டதாக போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அந்தப்பெண்ணை கொலையாளிகள் காருக்குள்ளேயே வெட்டிய பின்னர் காருக்கு தீயிட்டு இருக்க வேண்டும். எனினும் அந்தப் பெண் நெருப்பில் சிக்கிய பின்னர் தன்னை காப்பாற்றிக்கொள்ள காரின் கதவை திறந்து கொண்டு ஓடியிருக்க வேண்டும். எனினும் தலையில் ஏற்பட்ட ஆழமான வெட்டுக் காயத்தி னால் அந்தப் பெண்ணால் ஓட முடியவில்லை. உயிருக்கு போராடிய நிலையில் அவர் காரின் அருகிலேயே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மீட்கப்பட்ட கைத் தொலைபேசிகளில் கடைசியாக கிடைக்கப்பெற்ற அழைப்பை அடிப்படையாகக் கொண்டு சோதனை செய்ததில் நேற்று முன்தினம் நண்பகல் 12.40 மணியளவில் கிள்ளானில் உள்ள ஓர் உணவகத்தில் லலிதாம்பாள் த/பெ பத்மநாபன் (வயது 36) என்பவரையும் பின்னர் பிற்பகல் 1.40 மணியளவில் ஒரு டயர் கடையில் ரகுநாதன் த/பெ கணேசன் (வயது 29) என்பவரையும் மற்றும் கிள்ளான், தாமான் டேசாவில் 20 வயதுடைய பிரபுதேவா த/பெ ஆறுமுகம் என்பவரையும் இக்கொலை சம்பவ விசாரணைக்கு உதவும் வகையில் போலீசார் கைது செய்துள்ளனர். லெட்சுமியின் உடல் மீது நடத்தப்பட்ட சவப்பரிசோதனையில் கழுத்து கிட்டத்தட்ட துண்டிக்கப்படும் அளவிற்கு ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட் டுள்ளன. வலது புற தாடை, இரு புற கன்னத்திலும் காயங்கள் காணப்பட்டுள்ளன. உடலின் பின்புறம் மற்றும் தலைமுடி எரிந்து காணப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பல கோணங்களில் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார். உயிரிழந்த லெட்சுமி, சிலாங்கூர் கேரித்தீவில் பிறந்தவர். சில மாத காலமாக தனியாக இங்கு தாமான் டேசா உத்தாமாவில் வசித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தன் கணவரை அவர் விவாகரத்து செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு அஸ்மிதா (வயது 14 ), விக்னேஸ் (வயது 12) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். லெட்சுமியின் இறுதிச் சடங்கு தெலுக் பங்லீமா காராங் தாமான் டத்தோ ஹோர்மாட்டில் உள்ள அவரின் சகோதரர் இல்லத்தில் நடைபெற்றது. பின்னர் அவரின் உடல் கிள்ளான் சிம்பாங் லீமாவில் தகனம் செய்யப்பட்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img