புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

சிறுமி லாரணியாவின் மரணம் நிகழ்ந்தது எப்படி?
வெள்ளி 24 மார்ச் 2017 12:48:43

img

ஐந்து வயது சிறுமி லாரணியா மரணம் தொடர்பில் நிர்ணயிக்கப் பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப விரிவான மற்றும் வெளிப் படையான விசாரணை நடத் தப்படும் என்று மலேசிய சுகாதார அமைச்சு நேற்று உறுதி அளித்துள்ளது. அதேவேளையில் லாரணியாவின் மரணம் தொடர்பில் எந்தவொரு ஏஜென் சியும் நடத்தக்கூடிய விசாரணைக்கு மலேசிய சுகாதார அமைச்சு ஒத்துழைப்பு வழங்கும் என்று கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்து வமனையின் இயக்குநர் டாக்டர் டிங் லாய் மிங் தெரிவித்தார். சிறுமி லாரணியா த/பெ வில்பெர்ட் மரணம் தொடர்பில் அவரின் குடும்பத்தினருக்கு கிள்ளான் துங்கு அம்பு வான் ரஹிமா பெரிய மருத்துவமனை தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித் துக்கொள்வதாக குறிப்பிட்ட டாக்டர் டிங் லாய் மிங், அந்த சிறுமியின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நிர்ணயிக்கப்பட்ட நடப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப சவப்பரிசோதனையும் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்துவமனையின் அலட்சியப் போக்கின் காரணமாகவே கடந்த மார்ச் 20 ஆம் தேதி தனது ஐந்து வயது பிள்ளை மரணம் அடைந்ததாக அவரின் தாயார் பிரேம்ஸ்ரீ த/பெ புஷ்பநாதன் (வயது 30) கடந்த 22-3-2017 ஆம் தேதி பத்திரிகைகளுக்கு அளித்த புகாரின் தொடர்பில் டாக்டர் டிங் ஓர் அறிக்கையின் வழி விளக்கம் அளித்தார். கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில் தொடர்ந்து காய்ச்சல் கண்டு வந்த தன் மகளுக்கு கிள்ளான் பெட்டானிக் கிளினிக் மற்றும் சுங்கை பூலோ மருத்துவமனை ஆகியவற்றுக்கு கொண்டு சென்ற பின்னர் கடைசியாக கிள்ளான் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது அந்த சிறுமி உயிரிழந்ததாக பிரேம்ஸ்ரீ புகார் தெரிவித்து இருந்தார். கடந்த 20-3-2017 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு சிறுமி லாரணியா கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்துவமனையின் அவசரப்பிரிவுக்கு கொண்டு வரப்பட்டதாக டாக்டர் டிங் விளக்கினார். அவர் அப்போது சுயநினைவை இழந்திருந்தார். இலுப்பு வந்த நிலையில் காணப்பட்டார். அவரை தொடக்க கட்டமாக பரிசோதனை செய்ததில் அவர் உயிர் இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. இதய இயக்கத்தை கொடுப்பதற்கு சி.பி.ஆர். மருத்துவமுறை பயன்படுத்தப்பட்டது. ஆனால், அச்சிறுமிக்கு உயிர்கொடுக்க முடியவில்லை. அதன் பின்னரே மரணத்திற்கான காரணத்தை கண்டறிய சவப்பரிசோதனை நடத்தப்பட்டதாக டாக்டர் டிங் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img