திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

சசிகலா- பன்னீர்செல்வம் அணியினருக்கு கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்கீடு!
வியாழன் 23 மார்ச் 2017 14:53:42

img

ஆர்.கே.நகர்த் தொகுதியில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு 'தொப்பி' சின்னத்தையும், பன்னீர்செல்வம் அணிக்கு 'இரட்டை மின்கம்பம்' சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக மூன்றாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலை மையில் ஓர் அணியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தலைமையில் ஓர் அணியும் உருவானது. இதனிடையே, ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத்தேர்தலில் சசிகலா அணியில் டி.டி.வி. தினகரனும், பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனனும் வேட்பாளர்களாக அறி விக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்த தீபா இன்னும் மனுத்தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதற்கிடையில், இரட்டை இலைச் சின்னம் கேட்டு சசிகலா, பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். நேற்று இரண்டு தரப்பு வழக்கறிஞர்களும், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் வாதிட்டனர். இதைத் தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னத்தை இரண்டு அணியினருக்கும் தர முடியாது என்றும், அ.தி.மு.க பெயரைப் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. மேலும், நாளைக்குள் (இன்று) கட்சியின் பெயர், சின்னங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சசிகலா அணியினர், 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா' என்ற கட்சிப் பெயரையும், தொப்பி, கிரிக்கெட் மட்டை, கத்தரிக் கோல், ஆட்டோ போன்ற சின்னங்களைப் பரிந்துரை செய்தனர். இதேபோல், பன்னீர்செல்வம் அணியினர் 'அதிமுக புரட்சித்தலைவி அம்மா ' என்ற பெய ரையும், 'இரட்டை மின்கம்பம்' சின்னம் கேட்டு பரிந்துரை செய்தனர். இதனிடையே, சசிகலா அணிக்கு 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா' என்ற கட்சிப் பெயரையும், 'தொப்பி' சின்னமும், பன்னீர்செல்வம் அணிக்கு 'அ.இ.அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா' என்ற பெயரும், 'இரட்டை மின்கம்பம்' என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறு வனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி

மேலும்
img
ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்

மேலும்
img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img