வியாழன் 25, ஏப்ரல் 2019  
img
img

5 கொலை!
வியாழன் 23 மார்ச் 2017 13:17:42

img

5 பேர்களைக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் முதலில் குற்றத்தை ஒப்புக்கொண்ட டத்தோ ஒருவரின் மெய்க்காப் பாளர் ஜாஃபார் ஹலிட் (38) நேற்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் அதே குற்றத்தை மறுத்துள்ளார். கடந்த டிசம்பர் 1ஆம் தேதி இரவு 7.15 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரையில் பினாங்கு பாலத்தின் அருகில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் அவர் இந்தக் கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார். கிளோக் 19 இரக கைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி டாக்டர் ஹரிவர்ணி கிருஷ்ணன் (33), நுருல் ஹூடா, அப்துல் அஸிஸ் (38), லீ ஹோங் (32), முக மட் அமீருல் அமீன் முகமட் அமீர் (28), புவா பீ ஜோ (32) ஆகியோரைக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் அவர் முத லாவதாகக் குற்றம் சாட்டப்பட் டார். கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நீதிபதி இர்வான் சூவாயிபோன் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஜாஃபார் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். நீதிபதி இர்வான் விடுமுறையில் இருந்த காரணத்தால் நேற்று நீதிபதி ரோஸ்லான் ஹமீட் முன்னிலையில் நடை பெற்ற வழக்கு விசாரணையில் ஜாஃபார் இதே குற்றத்தை மறுத்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு குற்றஞ் சாட்டப்பட்டவர் கவுன்சிலிங்குச் செல்லுமாறும் உத்தர விடப்பட்டுள்ளது. இதனிடையே, மேலே குறிப்பிட்ட சம்பவ இடத்தில் அதே நேரத்தில் ஓங் தெய்க் குவோங் (32) என்னும் வர்த்தகர், சோய் ஹோன் மிங் (32), செந் தில் முருகையா (38) ஆகியோரைக் கொலை செய்ததோடு லிம் பூன் லெங் (32) என்பவரைக் காயப்படுத்திய வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட ஜாஃபார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஷாரிஃபா இஜூரா சைட் மாசூர் இந்த வழக்கு விசாரணையும் ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா?

எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான

மேலும்
img
அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன. 

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்

மேலும்
img
சீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.

2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை

மேலும்
img
அனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.

தமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்

மேலும்
img
அனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.

ஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img