சனி 22, செப்டம்பர் 2018  
img
img

உணவகங்களுக்கு உரிமம்!
வியாழன் 23 மார்ச் 2017 13:15:11

img

கிள்ளான் வட்டாரத்தில் இயங்கும் உணவகங்களிலிருந்து வெளியேறும் எண்ணெய்ப் பசை, கொழுப்பு கலந்த கழிவுப் பொருட்கள் போன்றவற்றை வடி கட்டும் வகையிலான வடிகட்டிக் கம்பிகளைப் பொருத்தாமல் செயல்படும் உணவகங்கள் மீது அபராத தண்டனை நடவடிக்கை மேற்கொள்ளப் படுவ துடன் வர்த்தக லை சென்ஸ் அனுமதியும் நிராகரிக்கப்படும் என்று கிள் ளான் நகராண்மைக்கழகம் சம்பந்தப்பட்ட உண வகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வடிகட்டிகளைப் பொரு த்தாமல் வர்த்தகம் செய்யும் உணவகங்களை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கும் சம்பந்தப்பட்ட கழகம் திட்டமிட்டு வருவதாக, அதன் உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் ஏ.ஜி.மஸ்லான் செய்தியாளர் களிடம் கூறினார். மேற்பட்ட விவகாரம் தொடர் பாகக் கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் 637 உணவகங்களில் வடிகட்டிகள் பொருத்தப்பட்டிருந்தது காணப்ப ட்டபோதிலும், அவை முறையாகச் செயல்படும் வகையில் அமைக்கப்படவில்லை என்று அறிய வந்துள்ளதாக அவர் குறிப் பிட்டார். மேலும், பெரும்பாலான வடிகட்டிகள் உடைந்து பழுதடை ந்த நிலையில் இருந்ததாகவும் இன்னும் சில உணவகங்களில் பொருத்தப்பட்ட வடிகட்டிகள் எண்ணெய்க் கொழுப்பு கலந்த கழிவுப் பொருட்களை வெளி யேற்ற இயலாத அளவுக்கு சிறிய அளவில் அமைக்கப்பட்டிருந் ததைக் காண நேர்ந்ததாகவும் தெரி வித்த அவர், இதன் தொடர்பில் முறையாகச் செயல்படாத சில உணவகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் மேலும் சில உணவகங்களுக்கு அபராத தண்டனை விதிக்கப்பட் டதாகவும் அவர் தெரிவித்தார். அண்மையில் மேற்கொள்ளப் பட்ட சோதனை நடவடிக்கை தொடர்பில், எம்பிகே-வின் துணைச் சட்டத்தின் கீழ் மேற் பட்ட உணவகங்களுக்கு தலா 1,000 வெள்ளி அபராதம் விதிக் கப்பட்டதாகவும் ஒரு சில உணவகங்கள் அபராதத் தொகை யைக் குறைக்க மேற்கொண்ட மேல்முறையீடு விண்ணப்பமும் நிரா கரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img