வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

மக்கள் வெள்ளத்த்தால் ஸ்தம்பித்தது ஜொகூர்!
வியாழன் 23 மார்ச் 2017 12:53:18

img

கோத்தா ராயா கெலாரியாவில் நேற்று மாலை ஜொகூர் சுல்தான் தொடக்கி வைத்த பங்சா ஜொகூர் கனவு இல்லங்களுக்கான வீடுகளுக்கு பதிந்து கொள் வதற்காக நேற்று காலை 9.00 மணி முதல் ஆயிரக்கணக்கான ஜொகூர் மக்கள் கோத்தாராயா வில் குழுமத் தொடங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரமே ஸ்தம்பித்தது. மக்கள் தேவைகளுக்கு ஏற்ப 80 ஆயிரம் வெள்ளியிலிருந்து 4 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி வரையிலான ஆயிரத்து 840 வீடுகள் இவ்வாண்டு மத்தியில் நிர்மாணிக்கும் வகையில் சுல்தான் இந்த வீட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.நேற்று மாலை 4.00 மணிக்கு இந்த பதிவு தொடங்கப்பட்ட போதிலும் நேற்று முன்தினம் இரவே மக்கள் கோத்தாராயாவில் கூடத் தொடங்கி விட்டனர். இன்று தனது 59ஆவது பிறந்த நாளை கொண்டாடும் சுல்தான் இப்ராஹிம் இஸ்கண்டார் தனது மாநில மக்களுக்காக இந்த சிறப்பு பரிசை வழங்கி யிருக்கிறார். இந்த பெரும் திட்டத்தை தனது யாயாசான் சுல்தான் இப்ராஹிம் வாரியம் மூலம் ஜொகூர் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஜொகூர் லேண்ட் நிறுவன நிலத்தில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. ஜொகூர் மக்கள் தங்கள் விண்ணப்பங்களை www.yayasansultanibrahim.org.my எனும் அகப்பக்கத் திற்கு சென்றும் விண்ணப் பிக்கலாம். தகுதியானவர் களுக்கு முன் பணமாக ஒரு வெள்ளி மட்டுமே வசூலிக்கப் படுவதோடு நூறு சதவிகித கடனும் வழங்கப்படும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img