ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

மலாக்கா தூதராக ரஜினிகாந்த்!
புதன் 22 மார்ச் 2017 14:12:41

img

மலாக்கா சுற்றுலாத் துறை தூதராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நியமிக்கப்படலாம் என்று கலாச்சார , சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் தெரிவித்தார்.அமைச்சரின் இந்த அறிவிப்பானது மக்களவையை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த் தியது. சுற்றுலாத் துறைக்கு பேர் போன இந்த வரலாற்று மாநிலத்தின் பால் இந்திய நாட்டு சுற்றுப் பயணிகளை சூப்பர் ஸ்டாரால் சுண்டி இழுக்க இயலும். எங்களின் சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதில் ரஜினி ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தொடர்பு கொண்டு அவரின் அனுமதியினை பெற அமைச்சர் நஸ்ரி முற்படுவார். அரசு உரை தொடர்பில் தனது அமைச்சர் உரையினை நிறைவு செய்த அமைச்சர் இந்த இனிய தகவலை வெளியிட்டார். சூப்பர் ஸ்டார் ஒரு சூப்பர் தூதராக மிளிர்வார். இதற்கு முன்பு இந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான் மலாக்கா சுற்றுலாத் துறை தூதராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். 2008ஆம் ஆண்டு இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், நாட்டின் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு இவரின் நியமனம் உறுதுணையாக இல்லை என்று கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தோங் ஹிம் குறைபட்டுக் கொண்டார். மாநிலத்தின் பால் இந்திய நாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்ப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை நியமிக்கலாமே என்று சிம் தோங் அவையில் ஆலோசனை தெரிவித்தார். ஷாருக்கான் பங்களிப்பு அவ்வளவு உயிரோட்டமாக இல்லை. கபாலி திரைப்படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினியை தூதராக நியமித்தால் என்னவென்று சிம் தோங் அமைச்சரை பார்த்துக் கேட்டார். கபாலி என்பது ரஜினியின் 159ஆவது படம். கபாலீஸ்வரன் என்ற பெயரில் ரஜினி நடித்து சக்கைப் போடு போட்டுள்ளார். இந்தியாவில் மட்டுமின்றி மலேசியாவில் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img