திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

களும்பாங் தோட்டப் பள்ளிக்கு விடியலே இல்லையா!
செவ்வாய் 21 மார்ச் 2017 13:44:50

img

சிலாங்கூர், உலுசிலாங்கூரில் அமைந்திருக்கும் களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டடத்தின் கட்டுமானம் முடிவடைந்து இரண்டு ஆண்டு களை நெருங்கும் நிலையில் இன்னமும் அதனை பயன்படுத்த முடியாமல் ஏங்கி நிற்கும் மாணவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உலுசிலாங்கூர் நாடாளுமன்றஉறுப்பினரும், கல்வி துணை அமைச்சருமான டத்தோ ப.கமலநாதனின் செயல்பாடுகள் மிகப் பெரிய கேள்விக் குறியை ஏற்படுத்துவதாக நண்பன் குழு கருதுகின்றது. சமீபத்தில் களும்பாங் தமிழ்ப்பள்ளிக்கு வருகையளித்திருந்த டத்தோ ப.கமலநாதன் அப்பள்ளிக்கூடத்தின் புதியக் கட்டடம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பட்டும் படாமலும் பதில் தந்திருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத் தினைக் கட்டுவதற்கு முன்னர் நில உரிமை தொடர்பில் ஏன் உலுசிலாங்கூர் மாவட்ட நில அலுவலகத்தின் வழி தகவல்கள் பெறப்படவில்லை என்ற கேள் விக்கு யார் பதில் தருவது? மாவட்ட நில அலுவலகத்தில் பத்தே நிமிடங்களில் பெறக் கூடிய தகவல்களைப் பெறாமல் கட்டடத்தினை எழுப்பிய பின்னர் பயன்படுத்த முடியாத அவ லத்திற்கு யார் பொறுப்பேற்பது? மேலும் மலேசியக் கல்வியமைச்சு நேரடியாக மாநில அரசாங்கத்தோடு நில விவகாரங்களைத் தீர்ப்பதற்கு முடியாதா போன்ற கேள்விகள் பதிலுக்காகக் காத்திருக்கின்றன. களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் அவலத்திற்கு மலேசிய கல்வியமைச்சின் துணைக் கல்வியமைச்சரே முழுபொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்கும் பெற்றோர்களுக்கு யாராவது பதில் தருவார்களா? தேசிய முன்னணி அரசாங்கத்தின் பிரதமரான டத்தோ ஸ்ரீ நஜீப் துன்ரசாக், மலேசியக் கல்வியமைச்சில் ம.இ.கா.வினைப் பிரதிநிதித்து டத்தோ ப.கமலநாதனை துணைக்கல்வியமைச்சராகப் பதவியில் அமர்த்தியது தமிழ்ப்பள்ளிகள் எதிர் நோக்கும் தீர்வில்லா பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டிய பட்சத்தில் மேலும் மேலும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடுகள் தொடர்பில் வில்லங்கத்தை ஏற் படுத்து வது நியாயமா? நண்பன் குழுவைப் பொறுத்தவரை களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு எப்போது விடியல்? என்ற கேள்விக்குச் சரியான பதிலை யாராவது தருவார்களா என்பதே முக்கியமான நோக்கமாகும். பதில் வருமா? வராதா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img