வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

10 மாடி அடுக்ககத்தில் அவதியுறும் 170 குடும்பங்கள் !
திங்கள் 20 மார்ச் 2017 13:07:05

img

பத்துமலை சுற்றுலா தலம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது கம்போங் லட்சுமணா. இங்குள்ள 10 மாடிகளைக் கொண்ட ‘லட்சுமணா ஜெயா ஏ’ மலிவு விலை அடுக் குமாடி வீடுகளில் 170 குடும்பங்கள் வாழ்கின்றன. பொதுத்தேர்தல் வந்து விட்டால் பத்துமலை சட்ட மன்றத் தொகுதிக்கு வழங்கப் படும் குறியீடு ‘என்16’ (N16). இங் குள்ள மக்களின் பிரச்சினைகளை கவனிப் பதற்காக ம.இ.கா சார்பில் அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நியமனம் செய்துள்ள ஒருங்கிணைப்பாளர்கள் 5 பேர். இதன் சட்டமன்ற உறுப்பினர் (பி.கே.ஆர்) அமினுடின் ஷாரி. சுற்றியிருப்பது செலாயாங் நாடாளுமன்றத் தொகுதி. இதன் உறுப்பினர் பி.கே.ஆரின் வில்லியம் லியோங் ஜீ கீன். கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் மாநில மந்திரி புசாரான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி. ஆனால், இந்த அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர் தங்கள் பிரச்சினைகள் பற்றி எத்தனையோ ஆண்டுகள் புகார் செய்தும், இன்னும் கேட்பாரற்றவர்களாகவே இருக்கின்றனர். அவ்வப்போது தற்காலிக தீர்வுதான் கிடைக்கிறதே தவிர நிரந்தரமாக எங்களுக்கு விடியல் எப்போது என்று கேள்வி கேட்கின்றனர். 21ஆவது நூற்றாண்டில் இப்படியும் ஒரு வாழ்க்கையா என்ற கேள்வி கம்போங் லட்சுமணாவிலுள்ள லட்சுமணா ஜெயா ஏ அடுக்குமாடி வீட்டிற்கு செல் பவர்கள் மத்தியில் கண்டிப்பாக எழும் என்று கூறலாம். அடுக்குமாடி வாழ்க்கை என்றாலே அதற்கான சில அடிப்படை வசதிகள் அங்கு இருக்க வேண்டும். ஆனால் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இங்கு வாழும் 170 குடும்பங்கள் தவித்து வருகின்றன. இருண்ட குகைக்குள் வாழும் வாழ்க்கை ஒரு புறம் இருக்கையில் குப்பைகளின் மத்தியில் வாழும் அவலமும் இங்கு ஏற்பட்டு வருகிறது.இந்த 10 மாடி அடுக்ககத்தில் வாழும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படிக்கட்டின் மூலம்தான் மேல் மாடியுள்ள வீடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஒரு புளோக்கிற்கு இரு மின் தூக்கி வசதிகள் இருந்தாலும் கூட கடந்த இரு வருடங்களாக அவை செயலிழந்து கிடக்கின்றன. மாதத்திற்கு வெ.40ஐ பரா மரிப்பு கட்டணமாக இங்குள்ள குடும்பங்கள் கட்டி வருகின்றன. இருந்தபோதும் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் நிர்வாகம் பணத்தை மட்டுதான் எண்ணி வருகிறார்களே தவிர இங்குள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட பாடில்லை என இங்கு வசிக்கும் மக்கள் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். பிள்ளைகள் விளையாடுவதற்காக இங்கு கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் பிள்ளைகளைக் காட்டிலும் பாம்புகளும் நாய்களும்தான் அதிகமாக நேரத்தை கழிக்கின்றன. புல் மண்டிக் கிடக்கும் இந்த விளையாட்டு மைதானத்தில் தங்களின் பிள்ளைகளை விளையாடவிட இங்குள்ள மக்கள் அஞ்சு கின்றனர்.இப்படி பல குறைபாடுகளும் பிரச்சினைகளும் நிறைந்த இந்த அடுக்குமாடி குடியிருப்பின் மக்களை சந்தித்துப் பேசியதில் தலைநகரின் மையப்பகுதியிலும் இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து வருகிறார்களா என்ற கேள்விதான் மனதில் தோன்றியது. மின்சாரம்- நீர் வசதி இல்லாமல் இரு நாட்கள் தவிப்பு! கடந்த 15ஆம் தேதி இந்த அடுக்குமாடிக்கான மின்சார நிலையத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் எரியூட்டப்பட்டதால் மின் சார கேபள்கள் அதில் கருகின.இதனால் இரு நாட்களுக்கு இந்த குடியிருப்பில் மின்சாரத் தடை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி மின்சாரத்தால் இயங்கக் கூடிய நீர் மோட்டார் பம்பும் செயல்படாததால் நீர் வசதியும் இல்லாமல் இங்குள்ளவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இதன் தொடர்பில் குடியிருப்பின் நிர் வாகம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பத்துகேவ்ஸ் தொகுதி தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் உதவியால் மின்சார கேபள்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் மின்சார வசதி மீண்டும் கிடைத்தது என மேரி தெரிவித்தார். செயலிழந்து கிடக்கும் மின்தூக்கிகள்! இந்த அடுக்குமாடியின் 8ஆவது மாடியில் வசித்து வந்த பாட்டி மின்தூக்கி செயலிழந்து கிடப்பதால் அடிக்கடி படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வந்ததால் உடல் நலம் குன்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சில தினங்கள் கழித்து அவர் மருத்துவமனையிலேயே இறந்துவிட்டார். இந்த குடி யிருப்பில் போதுமான வசதி இல்லாத காரணத்தால் அவருக்கு மருத்துவமனையின் சவக்கிடங்கிலேயே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன என சு. முனியம்மா (வயது 39) தெரிவித்தார். மின்தூக்கி இல்லாததால் அவரின் உடலை மேல் மாடிக்கு கொண்டு செல்வது கடினம். அதுமட்டுமின்றி இருண்டு கிடக்கும் கீழ் மாடியில் இறுதிச் சடங்கை செய்ய முடியாத காரணத்தினால்தான் அவரின் குடும்பத்தினர் இந்த முடிவை எடுத்ததாக அவர் சொன்னார். மழை பெய்தால் முதல் மாடியில் வெள்ளம் ஏற்படும்! மழை வந்துவிட்டால் இந்த அடுக்குமாடியின் முதல் மாடியில் வெள்ளம் ஏற்படும். இந்த அடுக்குமாடியின் மழை நீர் குழாய் உடைந்திருப்பதும் குப்பைகள் அடைத்து இருப்பதுமே இதற்கு காரணம் என சு.அமராவதி (வயது 53) தெரிவித்தார்.மின்தூக்கி செயல் இழந்து கிடப்பதால் மேல் மாடியில் உள்ள மக்கள் குப்பைகளை அங்கிருந்து கீழே கொட்டு கின்றனர். இதனால் கீழ் மாடி குப்பைகளினால் நிறைந்து காணப்படுகிறது. குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையையும் இந்த குடியிருப்பின் பராமரிப்பு நிறுவனம் செய்வதில்லை. நாங்களே பணத்தைக் கட்டி வெளியில் உள்ள வேலையாட்களை கொண்டு குப்பைகளை சுத்தம் செய்து வருகிறோம் என அவர் சொன்னார். சுகாதாரமற்ற நிலை! இந்த குடியிருப்பு சுகாதார மற்ற நிலையில் உள்ளதற்கு அதன் நிர்வாகமே காரணம். ஒரு நிலையான நிர்வாக இங்கு செயல்படுவதில்லை. அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் எங்களின் பிரச்சினைகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை என சரோஜா காளியம்மாள் (வயது 42) தெரிவித்தார்.சுற்றுச் சூழ லில் புற்கள் மண்டிக் கிடக்கிறது. இதனை வெட்டுவதற்குக் கூட அவர்களுக்கு நேரம் இல்லை. இதனால் பாம்புகளின் தொல்லை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தெருநாய்களின் நடமாட்டமும் இங்கு அதிகம் உள்ளதால் அவை ஆங்காங்கே மலம் கழித்து விடுகின்றன. அதனையும் யாரும் சுத்தம் செய்வதில்லை. முறையான குப்பைக் கொட்டும் இடம் இருந்தாலும்கூட மின்தூக்கி பிரச்சினையால் ஆங்காங்கே குப்பைகள் வைக்கப்படுவதால் இன்று இவ்விடமே குப்பை தொட்டிபோல் காட்சி அளிப்பதாக அவர் சொன்னார். டிங்கிக் காய்ச்சலின் பாதிப்பு அதிகரிப்பு! சுத்தமான சூழ்நிலை இல்லாத காரணத்தினால் இங்கு டிங்கி காய்ச்சினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதுவரையில் இந்த ஒரு புளோக்கில் மட்டும் நான்கு பேருக்கு டிங்கிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு டிங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 வயது இளம்பெண் இன்னமும் செலாயாங் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பிரச்சினையினால் எங்களின் பிள்ளைகளை நாங்கள் விளையாடுவதற்குக் கூட வெளியே விடுவதில்லை என சு.தமிழ்ச்செல்வி (வயது 40) தெரி வித்தார். வீட்டுக்குள் எவ்வளவுதான் சுத்தமாக இருந்தாலும் சுற்றுச் சூழல் சுத்தமாக இல்லாத பட்சத்தில் இதுபோன்ற உயிரை பறிக்கக்கூடிய நோய்கள் பரவி விடுகிறது.ஆகையால் எங்களையும் மனிதராக மதித்து எங்களின் குடியிருப்பின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்படி சம்பந்தப்பட்ட தரப்பினரை அவர் கேட்டுக் கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img