ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

தனியார் மருத்துவக் கட்டணச் சுமைகள்:
ஞாயிறு 19 மார்ச் 2017 13:54:07

img

மலேசிய அரசாங்கத்தின் சுகாதாரச் சேவைகள் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது மிகச் சிறந்த நிலையில் இருந்த போதிலும் தனியார் மருத்துவ சேவைகளை வழங்கும் வகை யில் மருத்துவமனைகளும், கிளினிக்குகளும் பேரளவில் பெருகி வருவது மலேசியாவின் சுகாதார பராமரிப்பிற்கான வாய்ப்புகளை உருவாக்கினாலும் பொது மக்களின் குறிப்பாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சுமைகளை ஏற்படுத்து கின்றதா என்பதே இன்றைய ஏவுகணையின் கேள்வியாகும். * சாதாரணமான சளித் தொல்லைக்கு மருத்துவம் பார்க்க ரிம.154.00 * தொடர் வறட்டு இரும லுக்கான சிகிச்சைக்கு ரிம.260.00 * சாதாரண காய்ச்சலுக்கான வைத்தியத்திற்கு ரிம.74 * காலில் ஏற்பட்ட காயத் திற்கு ஐந்து தையல்கள் போடுவதற்கு ரிம.160.00 * குழந்தையின் உடல் நல சிகிச்சைக்கு ரிம.100.00 என தனியார் மருத்துவக் கட்டணங்களின் தொடர்பில் பொதுமக்களிடையே அன்றாடம் பேசப்பட்டு வரும் தகவல்களை ஏவுகணை தொடுத்திருக்கும் நிலையில் மலேசியாவில் தனி யார் கிளினிக்குகளோ அல்லது மருத்துவமனைகளோ விதிக்கும் மருத்துவக் கட்டணங்கள் ஒருமுகப்படுத்தப் படவில்லை என்பதை தெளிவாக உணர முடிகின்றது. தனியார் கிளினிக்குகளில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறச் செல்லும் வியாதிகளான; * காய்ச்சல் * இருமல் /சளி * உடல் சோர்வு * வயிற்றுப் போக்கு * கண் வலி * தொண்டை வலி போன்ற சுகாதார பாதிப்பு களுக்கு தனியார் கிளினிக்கு களில் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையிலான சிகிச்சைகளுக்கான கட்டணம் இமயமென உயர்ந் திருப்பது தற்போதைய மக்களின் அன்றாட விவகாரமாக உருவெடுத்துள்ளதாகவே ஏவுகணை கருதுகின்றது. வரையறையே இல்லாமல் கட்டணங்களா? மலேசியாவின் தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழலில் விலைவாசிகள் மலை யென உயர்ந்து வருவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் அறவே இல்லாத நிலையில் நடுத்தர வருமானம் பெறுபவர்களும், குறைந்த வருமானம் பெறுகின்ற வர்களும் மிகப் பெரிய சிக்கலை எதிர் நோக்கியிருக்கும் நிலையில் தனியார் கிளினிக்குகளின் சேவைக் கட்டணங்களும் கட்டுக் கடங்காமல் உயர்ந்தால் பொதுமக்களின் சுமை மேலும் மோச மடையாதா என்பதே ஏவு கணையின் கேள்வி யாகும். மலேசியாவில் தனியார் மருத்துவ சேவைகளை வழங்கு வதற்கான தனியார் சுகாதார கிளினிக் குகளை பின்வரும் வகையில் வகைப்படுத் தலாம். * தனியார் மருத்துவ மனையின் கிளினிக்குகள் * தனியார் கிளினிக்குகள் * உரிம வர்த்தகக் கிளி னிக்குகள் * போலி கிளினிக்குகள் * 24 மணி நேர கிளினிக்குகள். தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சியும், தனியார் கிளினிக்கு களின் எண்ணிக்கை உயர்வும் மலேசியாவின் வளர்ச்சியினைப் பிரதிபலித்தாலும் தகுதியான மற்றும் தரமான சிகிச்சையை நேர விரயமில்லாமல் பார்க்க வேண்டும் என நினைக்கும் சாதாரண வருமானம் பெற்று வருபவர்களின் எண்ணம் அறவே ஈடேராமல் போய்விடுமோ என்ற அச்சமும் ஏவுகணைக்கு ஏற்பட் டுள்ளது. ஒரே மாதிரியான நோய்க்கு வைத்தியம் பார்ப்பதற் கான கட்டணம் வேறுபட் டிருப்பது ஒருபுறம் இருந்தாலும் கட்டண வேறுபாடுகள் ஆச்ச ரியப்படவைக்கும் நிலையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பது நியாயமா? என பாதிக்கப்பட்டவர்களின் கேள்விக்கு யாராவது பதில் தருவார்களா? இதற்கிடையே, 24 மணி நேர வைத்திய நிலையங்கள் (கிளி னிக்குகள்) என அறிவுறுத் தப்பட்டு அதற்கான விளம்பரப் பலகைகளும் மிகப் பெரிதாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் குறிப்பிட்ட மணிக்குப் பிறகு பெறப்படும் சிகிச்சைகளுக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக் கப்படுவது ஏன்? என்ற கேள் விக்கு இன்றுவரை ஏவுகணைக் குப் பதிலே கிடைக்கவில்லை. மேலும் தனியார் வைத்திய நிலையங்கள் விதிக்கும் கட்ட ணங்களுக்கு ரசீதுகள் வழங் கப்படுவது கட்டாயமாக்கப்பட வில்லை என்பதுவும் கட்ட ணங்கள் வேறுபாட்டிற்குக் காரண மாக அமையலாம் என ஏவுகணை ஊகிக்கின்றது. மருத்துவ கட்டண வழிகாட்டிகள் உள்ளனவா? மலேசியாவில் பேரளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவச் சேவைகளின் தனியார் மயமாக்கும் நடவ டிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றாலும் குறைந்த வரு மானம் பெறுபவர்களுக்கு மிகப் பெரிய சுமையினை ஏற்படுத்தாத வண்ணம் சில சாதகமான நடவடிக்கைகளை மலேசிய சுகாதார அமைச்சு மேற்கொள்ள வேண்டிய அவ சியம் இருப்பதாகவே ஏவு கணை உணர்கின்றது. இதற் கிடையே, தற்போது நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் தனியார் வைத்திய நிலையங்களின் கட்டணங்கள் தொடர்பான வழி காட்டிகள் வழங்கப்பட்டுள்ள னவா? என்பதையும் அறிய ஏவுகணை விரும்புகின்றது! மலேசியாவில் தனியார் கிளினிக்குகளின் கட்டணம் தொடர்பான ஆயிரக்கணக்கான புகார்கள் செய்யப்பட்டிருந் தாலும் அதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளனவா? என்பதைப் பொது மக்கள் அறிய விரும்பு கின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img