வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

ஷரியா சட்டத் திருத்தம் தேளிவாக இல்லையெனில் ஏற்றுக்கொள்ள முடியாது!
ஞாயிறு 19 மார்ச் 2017 12:39:44

img

1965 ஆம் ஆண்டு ஷரியா சட்டத்தில் கொண்டு வரப்படவிருக்கும் உத்தேச சட்டத்திருத்தமானது, கடுமையான தண்டனை விதிக்க வகை செய்யும் ஹுடுட் சட்டமில்லையென்றால் அந்த சட்டத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்செயல்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். இல்லையேல் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வழக்கறிஞரும் மனித உரிமை போராட்டவாதியுமான டத்தோ அம்பிகா கேட்டுக்கொண்டார். சட்டம் 355 என்று சுருங்க அழைக்கப்படும் ஷரியா சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தமானது தண்டனையை அதிகரிப்பதில்தான் ஆர்வம் காட்டப்படுகிறதே தவிர அந்த அந்த சட்டத்திருத்தத்தில் சேர்க்கப்படும் குற்றங்களின் தன்மைகள் பற்றி பெயர் குறிப்பிடவில்லை. எனவே நாம் அனைத்து மாநிலங்களின் சட்டங்களை தற்போது துல்லியமாக ஆராய வேண்டும். குறிப்பாக அதில் உள்ள தண்டனை முறையில் தீவிர கவனம் செலுத்தி ஆராய வேண்டும். அந்த மாநில சட்டங்கள் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான் சிறந்த வழி முறையாக இருக்க முடியும் என்று அவர் சொன்னார். அந்த இஸ்லாமிய ஷரியா சட்டம் உண்மையிலே ஹுடுட் சட்டமில்லை என்றால் அதன் பிறகு சட்ட வரைவை அல்லது திருத்தத்தை கொண்டு வரு வோம். அதற்கு முன்னதாக அவசரப்பட்டு எந்த தீர்மானத்திற்கும் வந்து விடக்கூடாது என்று அவர் சொன்னார்.நேற்று முன்தினம் இரவு இங்கு ஷரியா சட்டம் அல்லது சட்டம் 355 மீதான உத்தேச சட்டத்திருத்தம் தொடர்பான பொது விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அம்பிகா மேற்கண்டவாறு கூறினார். அந்த உத்தேச சட்டத்திருத்தத்தை ஆதரித்து வழக்கறிஞர்கள் லுக்மான் ஷேரிப் அலியாஸ் மற்றும் அயிடில் காலிட் பேசினர். உத்தேசத் திருத்தங்களானது ஹுடுட் சட்டத்தன்மையிலான துணை சட்டங்கள் அல்ல. மாறாக அவை நடப்பு சட்டத்தில் உள்ள தண்டனையின் வர வேப்பை அதிகப்படுத்தக்கூடிய திருத்தங்கள்தான் என்று லுக்மான் விளக்கினார். மேலும் நாடு சுதந்திரம் பெற்றது முதல் ஹுடுட் தன்மையிலான சட்ட முறைகள் மலேசிய முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாக இருந்து வந்துள்ளது. தற்போது உத்தேசிக்கப்பட்ட திருத்தங்கள்கூட தண்டனையை அதிகரிக்கச் செய்யும் சட்டத்திருத்தம் மட்டுமே என்று லுக்மான் விளக்கினார். எனினும் இந்த உத்தேசத் திருத்தங்கள் மக்களுக்கு விளக்கப்பட வேண்டும் என்று அம்பிகா கேட்டுக்கொண்டார். காரணம் பரிந்துரைக்கப்பட்டுள்ள உத்தேசத் தண்டனை முறையானது தற்போதைய தண்டனை முறையை காட்டிலும் பத்து முதல் 30 மடங்கு கூடுதலாக உள்ளது என்றார் அம்பிகா. தற்போது ஷரியா நீதிமன்றதில் விதிக்கப்படும் கூடிய பட்சத் தண்டனை மூன்று ஆண்டு சிறையாகும். 5 ஆயிரம் வெள்ளி அபராதம் மற்றும் 6 பிரம்படித் தண்டனையாகும். ஆனால், உத்தேச சட்டத்திருத்தமானது சிறைத் தண்டனையை 30 ஆண்டு காலமாக அதிகரிக்கிறது. அபராதத் தொகையை ஒரு லட்சம் வெள்ளியாகவும் உயர்த்தியுள்ளது. பிரம்படித் தண்டனையை நூறு ஆக உயர்த்தியிருக்கிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img