வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பார்வை தாஜ்மஹாலின் பக்கம் திரும்பியது ஏன்?
சனி 18 மார்ச் 2017 12:32:59

img

உலகில் பிரசித்திப்பெற்ற காதல் மாளிகையான இந்தியா, ஆக்ராவில் உள்ள அழியாப்புகழ் பெற்ற தாஜ்மஹாலை குண்டு வைத்து தகர்த்துவதற்கு ஐ.எஸ். பயங் கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியி ருப்பது அம்பலமாகியுள்ளது. உலகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப இத்தயை சதி நாச வேலையை புரிய அந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான புதிய திட்ட விவ ரத்தை டெலகிராமில் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் தகவல்களைத் தேடும் அமைப்பான சைட் புலனாய்வு குழு வெளியிட்டுள்ளது.ஆக்ராவில் உள்ள ஒரு நினைவிடத்தை தாக்கப்போவதாகக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் ஆக்ராவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தாஜ்மஹாலைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஐஎஸ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கையில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளும் வேனும் உள்ளது. அதில் அந்த வேன், தாஜ்மஹாலை நோக்கி செல்வதுபோலவும் தாஜ் மஹாலுக்குள் வேனை இயக்கி தகர்க்க திட்டமிட்டுள்ளது போலவும் அந்த காட்சி அமைந்துள்ளது. அப்படியென்றால் வெடிகுண்டு பொருத்தப்பட்ட வேன் தாஜ்மஹாலுக்குள் புகுந்து இந்த தாக்குதலை அரங்கேற்ற உள்ளதாக சுட்டிக்காட்டும் வகையில் அந்த புகைப்படம் அமைந்துள்ளது. மேலும் புகைப் படத்தின் கீழ்ப்பகுதியில் புதிய இலக்கு என எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கால்பதிக்க முயலும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அதன் முன்னோட்டமாகவே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்பான ஐபி தெரிவித்துள்ளது.ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவில் தடம்பதிக்க விடாமல் தடுக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உளவுத்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img