திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுப் பணிகளில் மட்டும் வில்லங்கங்கள்!
வியாழன் 16 மார்ச் 2017 12:26:46

img

சிரம்பான், மார்ச் 16- நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானப் பணிகளுக்கான செயல்பாடுகள் மிகப்பெரிய கேள்விக் குறியாகி இருப்பதாக நண்பன் குழுவிற்கு கிடைத்த புகார்கள் உறுதிப்படுத்துகின்றன. 2012ஆம் ஆண்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ஒதுக்கீடு செய்திருந்த சிறப்பு நிதியின் வழி (Pakej Rangsangan Khas 2012 - PRK 2012) 39 தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான செயல்பாடுகள் முடக்கம் கண்டிருப்பது வேதனையான விவகாரமாக நண்பன் குழு கருதுகின்றது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 2012ஆம் ஆண்டு சிறப்பு நிதியின் வழி பின்வரும் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு கட்டுமானத்திற்கான ஏற்பாடுக ளும் செய்யப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் ஏழு பள்ளிகளில் ஒரே ஒரு பள்ளியின் கட்டுமானம் மட்டுமே முழுமை பெற்ற மாணவர்கள் கல்வி பயின்று வரும் சூழ்நிலையில் மற்ற 6 பள்ளிகளின் நிலவரம் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. ஐந்தாண்டுகளில் ஒரே ஒரு பள்ளியை மட்டுமே முழு மைபடுத்தியிருக்கும் மஇகாவின் செயல்பாடுகள் ஐயத்தினையே ஏற்படுத்துவதாகப் பெற்றோர்கள் கூறியிருப்பதை நண்பன் குழு ஆமோதிக்கின்றது. * கொய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி - கட்டுமானம் முடிந்தது மாணவர்கள் பயன்படுத்தவில்லை. * ஆயர் ஈத்தாம் தோட்டப்பள்ளி - பூர்த்தி அடைந்து ஓராண்டாகியும் மாணவர்கள் ஏக்கத்தோடு நிற்கின்றனர். * சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளியும் பூர்த்தியடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் மஇகாவின் தலையீடுகளால் மாணவர்கள் பலியாகி வருகின்றனர். * பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானம் 70 விழுக்காடு மட்டுமே பூர்த்தி அடைந்துள்ளது. * ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானம் முடிந்தும் ஆலோசக நிறுவனத்தின் கெடுபிடிகளால் சுணக்கம் கண்டுள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. * ஷங்ஹாய் தோட்டத் தமிழ்ப்பள்ளி மட்டுமே பூர்த்தியடைந்து பயன்படுத்தப்படுகின்றது. * செயிண்ட் ஹீலியர் தோட்டப் பள்ளியின் கட்டுமானம் 20 விழுக்காடு மட்டுமே அடைந்துள்ளது. மேற்கண்ட தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமானத்திற்கான செலவீனங்கள் ஊதிய பலூனைப் போல பெருத்திருந்த நிலையிலும் மஇகாவின் வழியிலான மானிய நிர்வாகம் மிகப்பெரிய வில்லங்கத்தையே ஏற்படுத்தியுள்ளதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மலேசியக் கல்வியமைச்சின் வழியான மானியத்தின் செயல்பாடுகள் நத்தை வேகத்திலேயே நகர்கின்றன. இதற்கிடையே மேற்கண்ட தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானக் குத்தகையாளர்களுக்கு பல்வேறு இன்னல்களும் தடங்கலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும் நண்பன் குழு தேடுகின்றது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆறு பள்ளிகளின் கட்டுமானம் இன்றுவரை பூர்த்தி செய்யப்படாததற்கு நெகிரி செம்பிலான் மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ மாணிக்கத்தின் அலட்சியமும் காரணமா எனப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மஇகாவின் வழி தமிழ்ப்பள்ளிகள் நன்மை அடைகின்றதா என்ற கேள்விக்கு தொடர்ந்து வரும் விவகாரங்களின் வழி பதில் காண்போம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img