புதன் 14, நவம்பர் 2018  
img
img

வருமான வரி செலுத்தாமல் ’டிமிக்கு’ கொடுத்த நிறுவனங்களை வெளியிட்டது வருமான வரித்துறை
வெள்ளி 08 மே 2015 00:00:00

img
வருமான வரி செலுத்தாத 18 மிகப்பெரிய நிறுவனங்களின் பெயர்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. 10 கோடிக்கு மேல் வரிசெலுத்த வேண்டியவர்களின் பெயர்களை வெளியிட்டது இதுவே முதன்முறை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் சுமார் 500 கோடி வரையில் அரசுக்கு வரிசெலுத்த வேண்டியதுள்ளது. இவற்றில் 11 நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. வருமானவரித்துறை வெளியிட்டுள்ள நிறுவனங்கள் பட்டியல்: புளு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ரூ. 75.11 கோடி சோமானி சிமெண்ட் - ரூ. 22.47 கோடி ஆப்பிள்டெக் சொல்யூஷன் - ரூ. 27.07 கோடி ஜூபிட்டர் பிசினஸ் 21.31 கோடி ஹிராக் பயோடெக் ரூ. 18.54 கோடி குஜராத்தில் உள்ள நிறுவனங்கள்: பயோ பார்மா & ஹெல்த்கேர் லிமிடெட். - ரூ. 17.69 கோடி பன்யன் & பெர்ரி அலாய்ஸ் - ரூ. 17.48 கோடி லக்மிநாராயண் டி தாக்கார் - ரூ. 12.49 கோடி விராக் டையிங் & பிரிண்டிங் - 18.57 கோடி பூனம் இண்டஸ்ட்ரீஸ் - ரூ. 15.84 கோடி கன்வர் அஜய் புட் பிரைவேட் லிமிடெட் - ரூ. 15 கோடி ஆகும். மேலும் சில: கோல்டுசுஹ் டிரேட் இந்தியா - ரூ. 75.47 கோடி (ஜெய்பூர்) விக்டோர் கிரிடிட் & கன்ஸ்டரக்சர் -ரூ. 13.81 கோடி (கொல்கத்தா) நோபல் மெர்கண்டைஸ் - ரூ. 11.93 கோடி (மும்பை) ஜிகே தர்னே - ரூ. 38.31 கோடி (புனே) இவர்கள் உடனடியாக இதுவரை செலுத்தாத வருமான வரியை உடனடியாக செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து வருமான வரித்துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது இணையத் தளத்தில் இந்த பெயர்கள் வெளியிடுவதன் நோக்கம், சாதாரண மக்கள் வருமானவரித்துறைக்கு உதவ முன்வரமுடியும் என்பதுதான்” என்று தெரிவித்துள்ளனர்.
பின்செல்

வர்த்தகம்

img
முற்றிலும் இலவசமான அழகு சாதன பயிற்சி 

குறைந்தது 3,500 ரிங்கிடிலிருந்து 20,000 ரிங்கிட்

மேலும்
img
ரான்சம்வேரை விட சக்திவாய்ந்த இணைய வைரஸ் உலகம் முழுவதும் பரவுகிறது

வைரஸிலிருந்து கணினியை விடுவிக்க பிணைத் தொகை செலுத்த வேண்டும்

மேலும்
img
இசூசு நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

இசூசு மலேசியா செண்டிரியான் பெர்ஹாட்...

மேலும்
img
மொபைல் ஆப்களைப் பயன்படுத்தும் முன்பு இதனை கவனத்தில் கொள்ளுங்கள்!

நாம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களில்...

மேலும்
img
பல மில்லியன் கணக்கான கணக்குகள் Hack செய்யப்பட்டது:

உறுதிப்படுத்தியது YAHOO!

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img