செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

கட்டுப்பாட்டை இழந்து சாலையை பள்ளத்தில் விழுந்த கார்!
புதன் 15 மார்ச் 2017 13:01:41

img

கோத்தா திங்கி சிம்பாங் செலுயுட்டில் புரோட்டன் பெர்சோனா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு 3 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் வாக னத்தில் பயணித்த மூவர் மரணமுற்ற வேளையில் ஒருவர் கடுமையாக காயமடைந்தார். அச்சம்பவத்தில் மாண்டவர்கள் வாகன மோட்டியான நோர் ஹைசாம் பின் ஙாத்தினோ (வயது 34) பயணிகளான முகமட் இஸ்வான் ஙாத்தினோ (வயது 23), முகமட் இன்டெருல் பின் சைன் (வயது 32) என அடை யாளம் காணப்பட்டது. விபத்தில் கடுமையாக காயமடைந்த ஹிஷாமுடின் பின் ஙாத்தினோ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து காலை 9.58 மணிக்கு தகவல் பெற்ற கோத்தா திங்கி தீயணைப்பு, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு வாகனத்தில் சிக்கி மாண்ட வர்களையும் காயமடைந்தவரையும் மீட்டனர். காலை 9 மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படும் வேளையில் பொது மக்கள் அதனைக் கண்டு தகவல் வழங்கியதாக நம்பப் படுகின்றது. அவ்விபத்தில் மாண்ட மூவரில் இருவர் சகோதரர்கள் என்பதோடு காயமடைந்தவரும் மாண்டவர்களின் சகோதரராவார் என்பது குறிப்பிடத் தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img