வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

ஜொகூரில் வீடு வாங்கினால அந்நிய நாட்டினருக்கு குடியுரிமை?
புதன் 15 மார்ச் 2017 12:42:57

img

ஜொகூரில் உள்ள ஃபோரஸ்ட் சிட்டியில் வீடுகள் வாங்கும் அந்நிய நாட்டினர் மலேசிய குடி மக்களாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. அவர்கள் மலேசிய குடி மக்களாக மாறுவதிலிருந்து எதுவும் தடுக்க முடியாது என தான் நம்புவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார். இப்போது மேம்படுத்தப் பட்டு வரும் அந்த நகரை சுற்றிப் பார்த்த பின்னர் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்தத் திட்டத்தில் வீடுகள் வாங்குவோருக்கு நிரந்தர நிலப்பட்டா அந்தஸ்து வழங்கப்படவிருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டிருப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.மாநகர் வீதிகளில் விளக்கு கம்பங்களின் மீது இது தொடர்பான விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். சீன பிரஜைகளுக்கு 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் நிலம் விற்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், சுவரொட்டிகளில் காணப்படும் விளம்பரங்கள் வேறு மாதிரியாக கூறுகின்றன என்று அவர் தனது வலைப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். ஃபோரஸ்ட் சிட்டி குடியிருப் பாளர்கள் என்றென்றும் அங்கு தங்கியிருக்கலாம். சில ஆண்டு கள் அங்கு தங்கியிருந்த பின்னர், அவர்கள் குடிமக்களாக மாறுவதை தடுத்து நிறுத்த சட்டம் எதுவும் கிடையாது என்று அவர் மேலும் கூறினார். மலேசிய சட்டப்படி, இந்நாட்டில் 12 ஆண்டுகளுக்கும் மேல் தங் கியிருக்கும் எவரும் ஒரு பிரஜையாகும் உரிமையையும் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியையும் பெறுகிறார் என்று கூறிய அவர், இது நடைபெறாது என்பதற்கு எந்தவோர் உத்தரவாத மும் கிடையாது என்பதை சுட்டிக் காட்டினார். வெளிநாட்டினரின்பால் மலே சியா தாராள மனப்போக்குடன் நடந்து கொள்கிறது. ஆனால், அதன் சொந்த குடிமக்கள் தங்களுடைய சொத்துக்களுக்கு நிரந்தர நிலப்பட்டா பெறுவதில் தோல்வி அடைகிறார்கள் என்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பிபிபிஎம்) அவைத் தலைவருமான மகாதீர் கூறினார். எனினும், தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகம் அருகே அமைக்கப்பட்டு வரும் இந்த ஃபோரஸ்ட் சிட்டி அழகில் போற்றத்தக்கதாக இருப்பதை மகாதீர் ஒப்புக் கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img