திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

கஷ்டம் என்பதை உடைத்தெறியுங்கள்!
செவ்வாய் 14 மார்ச் 2017 11:45:23

img

எஸ்பிஎம் தேர்விற்குப் பின்னர் படிவம் 6 இல் உயர் கல்வியை மேற்கொள்வது கஷ்டம் அல்லது கடினம் எனும் சிந்தனையை உடைத்தெறிந்ததால்தான் இன்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (UNIVERSITI SAINS MALAYSIA-USM) பொருளாதாரத்துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பினை மேற் கொள்ள முடிந்ததாக விவேகத்தோடு கூறுகின்றார் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்திருக்கும் பல்கலைக்கழக மாணவியான பிரியதர்ஷினி மணிவாணன். கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஆறாண்டுக் கல்விக்குப் பின்னர் இடைநிலைப்பள்ளிக்கான கல்வியைக் கிள்ளான் ஷா பண்டாராயா இடை நிலைப்பள்ளியில் எஸ்பிஎம் தேர்விற்குப் பின்னர் எஸ்டிபிஎம் தேர்வினை எழுதும் வகையில் அதே பள்ளியில் 6 ஆம் படிவம் பயிலும் வாய்ப்பினைத் தேர்வு செய்ததாகவும் கூறுகின்றார் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் இரண்டாம் ஆண்டு மாணவியான பிரிய தர்ஷினி மணிவாணன். ஓர் ஆசிரியராகப் பணியாற்றும் இவரின் தந்தை மணிவாணன், குடும்பப் பொறுப்புகளைச் சுமந்திருக்கும் தாயார் விஜயலெட்சுமி தம்பதியரின் மூன்று செல்வங்களில் இரண்டாவது பிள்ளையான பிரியதர்ஷினி மணிவாணன் தன்னுடைய பெற்றோர்களுக்கு எவ்விதமான பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணமே படிவம் 6 இல் படிப்பதற்கான உந்துதலை ஏற்படுத்தியாகக் கூறியுள்ளதை எஸ்பிஎம் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. தன்னைப் போலவே தனது அண்ணனும் படிவம் 6 இல் கல்வி கற்று தற்போது பொறியியல் துறையில் மலாக்காவில் உள்ள அரசாங்க பல்கலைக் கழகத்தில் பயின்று வருவதாகக் கூறியுள்ள பிரியதர்ஷினி மணிவாணன் படிவம் 6 மிகவும் கடினம் என தனக்குள்ளேயே வட்டத்தைப் போட்டுக் கொள் வது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார். படிவம் 6இல் படிக்கும் போது ஏற்படும் அனுபவங்களும், கல்வி முறையும் நம் முடைய சிந்தனையாற்றலை மெருகூட்டுவதாக கூறியதோடு படிவம் 6 இல் போதிக்கும் ஆசிரியர்களின் செயல்பாடுகளும், வழிகாட்டிகளும் நிச்சயமாக மிகச் சிறந்த தேர்ச்சியினை எஸ்டிபிஎம் தேர்வில் பெறுவதற்கு வாய்ப்பினை உருவாக்கும் என்பதைத் தனது அனுபவத்தின் வழி பகிர்ந்து கொண்டார் பிரியதர்ஷினி மணிவாணன். ஒவ்வொரு இந்திய மாணவ மாணவிகளும் உறுதியான மனப்பான்மையோடும், தெளிவான லட்சியத்தோடும், தொடர்ச்சியான முயற்சியோடும் படிவம் 6 இல் உயர்கல்வியைத் தொடர்ந்தால் சிறந்த எதிர் காலம் நிச்சயம் அமையும் என்பதை உறுதியாக நம்புவதாகக் கூறினார் பிரியதர்ஷினி மணிவாணன்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img