திங்கள் 24, ஜூன் 2019  
img
img

தனியாரை நம்பியவர்களுக்கு சொந்த வீடு!
செவ்வாய் 14 மார்ச் 2017 11:31:37

img

நாட்டின் தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு அரங்கத் திற்கு வழிவிட்ட முன்னணி தோட்டமான புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள், கால் நூற்றாண்டுகள் கடந்தோடியும் தங்களின் அவலநிலை வாழ்க்கையை சொல்ல முடியாமல் குமுறி வருகின்றனர். தனியாரை நம்பிய தோட் டப்பாட்டாளிகள் எல்லாம் இன்று சொந்த வீட்டில் நிம்மதியாக இருக்கின்றனர். அரசாங்கம் வீடு கொடுக்கும் என்று நம்பிய நாங்கள் இன்னமும் நடுத் தெருவில் கேட்பாரற்ற நிலையில் இருக்கிறோம் என்று கண்ணீர் வடிக்கின்றனர் அத்தோட்ட மக்கள். 1980 ஆம் ஆண்டு ஜாலான் பூச்சோங், ஆறாவது மையில் உள்ள புக்கிட் ஜாலில் தோட்டத்தின் 1,800 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் கட்டம் - கட்டமாக கொள்முதல் செய்யத் தொடங்கிய போது, இந்த தோட்டத்தில் மூன்று தலைமுறையினராக வாழ்ந்த 100 பட்டாளிகளின் பிரச்சினையும் பூதகரமாக வெடித்தது. தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ( என்.யூ. பி.டபிள்யூ.) தங்களை காப்பாற்றும் என்று நம்பிய தொழிலாளர்களுக்கு 2008 ஆம் ஆண்டு அந்த தொழிற்சங்கம் சுத்தமாக கை கழுவியது. ஆடம்பர அடுக்குமாடி வீடுகள், சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கான தடுப்பு முகாம்கள், நெடுஞ்சாலைகள், கோல்ப் திடல்கள் என்று பணக் காரர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் புக்கிட் ஜாலில் தோட்ட நிலப்பரப்பை ஆக்கிரமித்த நிலையில் கடைசியில் எஞ்சியிருந்த 26 ஏக்கர் நிலத் திலாவது ஒரு பகுதி தங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுமா? என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அந்த இடத்திலும் 1992 ஆம் ஆண்டு நாட்டின் தேசிய அரங்கை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் இடம் தந்து விட்டது. தமிழ்ப்பள்ளி, இடுகாடு, கோயில் என்று ஒரு தோட்ட பாரம்பரிய பின்னணியுடன் விளங்கிய புக்கிட் ஜாலில் தோட்டம், நாலா புறமும் கூறுபோட்டதில் இதில் ஒரு பாட்டாளிகூட இன்று வரையில் பயன்பெறவில்லை என்பதுதான் நிதர்சனமாக உண்மையாகும். அருகில் இருந்த கின்றாரா தோட்டத்தை நிர்வகித்த ஹைலண்ட்ஸ் பெனிசுலா நிறுவனம், 1980 ஆம் ஆண்டு அத்தோட்டத்தை விற்பனை செய்த போது தனக்கு பாடுபட்ட எந்தவொரு தொழிலாளியையும் புறக்கணிக்காமல் அனைத்து தொழிலாளர்களுக்கும் சொந்த வீட்டை கட்டிக்கொடுத்தது. தோட்டத்து பள்ளி புதிய கட்டடத்தில் இடம் மாற வழிவகுத்தது. தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் புதிய வீடமைப்புப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது. தனியாரை நம்பிய அந்தப் பாட்டாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இன்று சொந்த வீட்டில் நிம்மதியாக இருக்கின்றனர். ஆனால், அரசாங்கத்தையும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தையும் நம்பிய 41 முன்னாள் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் எந்தவொரு அடிப்படை வசதியில்லாமல் தோட்டடத்தின் ஒரு பகுதியில் இன்னமும் குடிசைவாசிகளாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்கிறார் தோட்ட குடியிருப்பாளர் நடவடிக்கை குழுத் தலைவர் கே. பாலகிருஷ்ணன். ஆனால், எங்கள் தோட்ட நிலத்தை வாங்கிய அரசாங்கம், கின்றாரா தோட்ட மக்களை விட நல்ல முறையில் வீடுகளை கட்டிக்கொடுக்கும் என்று பெரிதும் நம்பினோம். ஆனால், 27 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னமும் எங்களுக்கு எந்தவொரு பதிலையும் சொல்ல முடியாமல் இப்பிரச்சினை கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் கிடக்கிறது. தோட்டப் பாட்டாளிகளுக்கு சொந்த வீடு கோருவது தொடர்பாக நாட்டின் பிரதமரை நேரடியாக சந்தித்துப் பேசிய முதல் தோட்ட மக்கள் நாங்கள்தான் என்று பாலகிருஷ்ணன் கூறுகிறார். நாங்கள் எங்கள் உரிமையைத்தான் கோருகிறோம். எங்களுக்கு மாற்று வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று பிரதமரின் சிறப்பு அதிகாரியாக இருந்த ரவீன் பொன்னையா உறுதி கூறியிருந்தார். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. புதிய செயலாளர் சீலனை சந்தித்தும் பேசினோம். இதுவரையில் பிரச்சினைக்கு தீர்வு கண்டபாடுஇல்லை. அவரும் இழுத்தடிப்பு போக்கை கடைப்பித்து வருகிறார். பிரதமர் அலுவலகத்துடன் மறுபடியும் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம். நாடு 14 ஆவது பொதுத் தேர்தலை எதிர் நோக்கிவரும் வேளையில் எங்களின் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காணும் வரையில் ஓய மாட்டோம் என்கிறார் பாலகிருஷ்ணன். அவசியம் ஏற்பட்டால் மறுபடியும் பிரதமர் அலுவலகத்தின் முன் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருக்கிறோம் என்றார் அவர். பி.எஸ்.எம். கட்சியின் பொதுச் செயலாளரும் தோட்டப்புற மக்கள் நல்வாழ்வு குழுத் தலைவருமான எஸ். அருட்செல்வம் கூறுகையில் கடந்த 27 ஆண்டு காலமாக புக்கிட் ஜாலில் தோட்ட மக்களை அரசாங்கம் அலைக்கழித்து வருவது சிந்தனைக்கு எட்டாத ஒன்றாகும். மூன்று தலைமுறையினராக தோட்ட மேம்பாட்டுக்கு உழைத்த மக்களை எப்படி ஓர் அரசாங்கத்தினால் உதாசீனம் செய்ய முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். 1990 ஆம் ஆண்டுகளில் கிள்ளான் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய மேம்பாட்டிற்கு இலக்கான கிள்ளான், சுங்கை ராசா தோட்ட மக்களுக்கு சொந்த வீடுகளும் உரிய இழப்பீடுகளும் தோட்ட நிர்வாகம் வழங்கியது. தற்போது புக்கிட் திங்கி என்று அழைக்கப்படும் கிள்ளான், ஹைலண்ட்ஸ் தோட்டம் மேம்பாட்டுக்குச் சென்றபோது அத்தோட்ட மக்களுக்கும் சொந்த வீடுகள் கிடைத்தன. காஜாங், பிரேமார் தோட்ட மக்களுக்கும் சொந்த வீடுகளும் இழப்பீடுகளும் கிடைத்தன. பந்திங் புருக்லேண்ட்ஸ் தோட்டம் மேம்பாட்டுக்கு எடுத்துக்கொண்ட போது அத்தோட்ட மக்களுக்கு சொந்த வீடுகளும் இழப்பீடும் கிடைத்தன. அப்படியென்றால் அரசாங்கம் வாங்கிய ஒரு தோட்டத்துக்கு அத்தோட்ட பாட்டாளிகளுக்கு வீடுகளும் இழப்பீட்டையும் ஏன் கொடுக்க முடியாது என்று அருட்செல்வம் கேள்வி எழுப்பினார். மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசாங்கமே வீடு கட்டிக்கொடுக்கத் தவறினால் தனியார் கட்டிக்கொடுக்காதற்கு யாரை குறை சொல்ல முடியும் என்று அவர் வினவினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
img
அஸ்மினும் நானும் 2016-இல்தான் அன்னியோன்யமானோம்

2013ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img