ஒளிவூட்டும் அழகில் கடலில் பவனி வந்த சிங்கமுக காளியம்மனுக்கு நடத்தப்பட்ட மாசி மகத் தெப்பத் திருவிழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்ம னின் திருவருளைப் பெற்றனர். கடந்த சனிக்கிழமை பினாங்கு, தெலுக் பஹாங்கில் உள்ள சிங்கமுக காளியம்மன் ஆலயத்தில் மாசி மகத் தெப் பத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. உள்ளூர் மற் றும் வெளி மாநிலங்களிலி ருந்து ஏறக்குறைய 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். மிதவையை வண்ண விளக்கு களைக் கொண்டு மிதக்கும் தேராக்கி மங்கல வாத்திய முழக் கத்துடனும் வாண வேடிக்கை ஒலியுடனும் சிங்கமுக காளி யம்மனைக் கடலில் பவனி வரச் செய்வது இத்திருவிழாவின் தனிச்சிறப்பாகும். மிதக்கும் தேரை இரு படகுகள் மூலம் இழுத்தவாறு கடலின் ஒரு பகுதிக் குக் கொண்டு சென்று கடலில் அம்பாளின் தரிசனத்தை வழங்கிவிட்டு இரவு 9.30 மணி யளவில் ஆலயத்திற்கு எடுத்துக் கொண்டு வரப்பட்டுச் சிறப்புப் பூசைகள் நடத்தப்பட்டன. அம்பாளுக்குத் தாலாட்டு பாடிய பிறகு பக்தர் களுக்குப் பிரசாதமும் வழங்கப்பட் டது. அம்பாள் கடலில் பயணிக்கும் அழகிய தெப்பத் தேரைத் தவிர பல வடிவங் களில் செய் யப்பட்ட தெப் பத் தீப விளக்கு களும் இத்திரு விழாவின் கூடுதல் சிறப்பு அம்சமாகும். சிங்கமுக காளியம் மனிடம் வேண்டிக் கொண்ட பக்தர்கள் வேண்டு தல்களை நிறைவேற்றும் பொருட்டு இந்தத் தெப்ப விளக்குகளை கடலில் மிதக்க விடுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் அதிக மான பக்தர்கள் கூடுவதால் இந்த ஆலயத்தின் தெப்பத் திரு விழா வைப் பினாங்கு மாநில அரசு வருடாந்திர நிகழ்வாக மாநில அரசின் நாள்காட்டியில் குறிப் பிடுவது அவசியம் என திரு விழாவில் கலந்துகொண்ட பக் தர்களில் சிலர் தெரிவித்தனர்.