செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

நம்ம தமிழ்ப்பள்ளிதான் நமக்கு சொந்த தாய்! பிறமொழிப் பள்ளிகள் நமக்கு வாடகைத்தாய்!
திங்கள் 13 மார்ச் 2017 12:58:06

img

எஸ்பிஎம் தேர்வினில் மிகச் சிறந்த தேர்ச்சியான 10 ‘ஏ’க்களைப் பெற்றிருந்த நிலையில் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் எஸ்டிபிஎம் தேர்வினை எழுதுவதற்கு ஏதுவாக படிவம் 6இல் பயில்வதற்கான வாய்ப்பினை தேர்வு செய்ததால் இன்று ஓர் அனைத்துலக நிறுவனத்தின் பொறியியலாளராக பணியாற்றி வருவதைப் பெருமையாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார் பொறியியலாளர் விஜயகாந்த் சின்னசாமி. பேரா மாநிலத்தின் கிளேபாங் ஜெயா (சுங்கை சிப்புட் நகருக்கு அருகே) தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்ற இவர் தனது இடைநிலைப் பள் ளிப் படிப்பினை படிவம் 6 வரை தாசெக் இடைநிலைப்பள்ளியில் தொடர்ந்து எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் மிகவும் சாதகமான நிலையில் இருந்த கார ணத்தினால் மலேசிய தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Universiti Teknologi Malaysia - UTM) இரசாயனத்துறை பொறியியலாளராகப் பயிலும் வாய்ப் பினைப் பெற்றதாக அடக்கத்தோடு கூறினார். தன்னுடைய உறுதியான முடிவின் வழி கடன் சுமையில்லாமல் பொதுப் பல்கலைக்கழகத்தினில் பயிலும் வாய்ப்பினைப் பெற்றதினால் சிறிய முறை யில் தின வர்த்தகத்தினை மேற்கொண்டிருந்த சின்னசாமிக்கு எவ்விதமான சுமையையும் ஏற்படுத்தாததால் வீட்டில் இருந்த மற்ற நான்கு சகோதர சகோ தரிகளும் பட்டதாரிகளாக உருவாகியிருப்பதற்கு பாலம் அமைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். தந்தை மற்றும் தொழிற்சாலை ஊழியரான தாயின் அர்ப் பணிப்பிற்கு மிகச் சிறந்த பரிசினை இன்று தந்துள்ளார் விஜயகாந்த் சின்னசாமி. தமிழ்ப்பள்ளியில் பயின்ற காலத்தில் பள்ளியின் மாணவர் தலைவனாகப் பொறுப்பேற்றிருந்த நிலையில் சீனர்கள் கணக்கிடும் கருவியினை அவர்கள் பயன்படுத்தும் போட்டியில் தேசிய நிலையில் வெற்றி பெற்றுள்ளதையும் நினைவு கூர்ந்தார். படிவம் 6இல் பயில வேண்டும் எனும் உறுதியான முடிவு இன்று தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக உருமாற்றியிருப்பதோடு அனைத்துலக நிறுவன வேலை வாய்ப்பின் வழி பல நாடுகளுக்கு வேலை நிமித்தம் செல்வதற்கான சூழலும் உருவாகியுள்ளதாகக் கூறினார் விஜயகாந்த் சின்னசாமி. படிவம் 6இல் பயில்வதற்கான வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதற்குத் தயங்கும் எஸ்பிஎம் தேர்வினை எழுதிய மாணவர்கள் தான் செய்த உறுதியான முடி வினால் கிடைத்திருக்கும் மிகச் சிறந்த வாய்ப்புகளை மனதில் கொண்டு தைரியமாக முடிவெடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்ப்பள்ளியில் கிடைத்த தலைமைத்துவ பண்புகளும் ஆசிரியர்களின் மிகச் சிறந்த வழிகாட்டல்களே தன்னை உயரிய நிலைக்கு இட்டுச் சென்றுள்ள தாக நன்றியோடு கூறுகின்றார் இரசாயன பொறியியலாளர் விஜயகாந்த் சின்னசாமி.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img