புதன் 14, நவம்பர் 2018  
img
img

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயத்தில் மலேசிய நண்பனின் தண்ணீர்ப்பந்தல்!
ஞாயிறு 12 மார்ச் 2017 14:52:45

img

கோலசிலாங்கூர் புக்கிட் தாலாங் தோட்டம் (ரிவர் சைட் தோட்டம்) ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயத்தின் 117 ஆம் ஆண்டு மாசி மகத் திருவிழா மலேசிய நண்பனின் தண்ணீர்ப்பந்தல்! ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் கோலசிலாங்கூர் புக்கிட் தாலாங் தோட்டம் (ரிவர் சைட் தோட்டம்) ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயத்தின் 117 ஆம் ஆண்டு மாசி மகத் திருவிழா இன்று 12.3.2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இந்த ஆலயத்திருவிழா நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு சிறப்பு பூஜையும் 8.30 மணிக்கு பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றுதலும் நண்பகல் 12 மணிக்கு மேல் குழந்தை பாக்கிய பூஜையும் நடைபெறும் என ஆலய நிர்வாக சபையின் சார்பில் இரா.குருநாதன் கூறினார். குழந்தை பாக்கியத்திற்கு கணவன் மனைவி இருவரும் வர வேண்டும். பெண்கள் சேலை அணிந்திருப்பது முக்கியம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அர்ச்சனைகள் நடைபெறும். அர்ச்சனைக்குரிய பொருட்களை ஆலயக் கடை யில் பெற்றுக் கொள்ளலாம். மலேசிய நண்பன் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு சுவை பானம் வழங் கப்படுகிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img