திங்கள் 21, ஜனவரி 2019  
img
img

இந்திய சமூகம் என்ன ஏமாந்த சமூகமா?
ஞாயிறு 12 மார்ச் 2017 13:22:25

img

செரண்டாவில் தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பூர்த்தியடையாத நிலையில் இருப் பதால் எப்போது கட்டி முடிக்கப்படும் என இங்குள்ள இந்திய சமுதாயத்தினர் கேள்வி எழுப்பினர். கடந்த 2012இல் செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டு வதற் கான முதலாவது அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. புதிய கட்டடம் எழுப்புவதில் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி தள்ளி வைக்கப்பட்ட அத்திட்டம் 2015இல் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப.கமல நாதனால் இரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டு விழா நடந்தேறியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் புதிய கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களில் நிறுத்தப்பட்டது. நேற்று தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பகுதியில் கல்வியமைச்சின் செரண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணியின் அறிவிப்பு பதாகை பொருத்தப் பட்டி ருந்ததாக செரண்டா தமிழ்ப் பள்ளியைக் காப்போம் இயக்கத் தலைவர் ஜீவா தெரிவித்தார். அந்த அறிவிப்பு பதாகையில், கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கப்படும், எந்த தேதியில் கட்டடம் பூர்த்தியாகும் எனும் விவரங்கள் இல்லாததால் இது ஒரு கண் துடைப்புக்காக மக்களை ஏமாற்றுவதற்காக போடப்பட்ட பதாகையா என ஜீவா வினவினார். இரு அடிக்கல் நாட்டு விழாக்களுக்கும், பள் ளிக்கூட நிலத்தைச் சுற்றி தகர சுவர் எழுப்பியதற்கும் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட மானியத்திலிருந்து செலவுகள் செய்யப்பட்டதா அல்லது சொந்தச் செலவில் மேற்கொள்ளப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பினார். செரண்டாவில் ஒரு தமிழ்ப்பள்ளி இல்லாததால் இங்குள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளை வெகு தொலைவிலுள்ள ரவாங் மற்றும் சுங்கை சோ தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புவதில் பெரும் நிதிச் சுமையை எதிர்நோக்குகிறார்கள் என்றார். ஆறு ஆண்டுகளாகியும் புலி வருகிறது கதை போல இங்குள்ள மக் களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கல்வியமைச்சு மற்றும் குத்தகையாளருக்கு எதிராக வரும் 14.4.2017இல் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் கொடுக்க விருப்பதாக ஜீவா தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img